பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் அமர்ந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். பின்னர் ரோஹித் சர்மாவை கட்டி அணைத்து விடை பெற்றார்.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தால் 445 ரன்கள் குவித்தது.