இந்திய அணியில் ஹரத்திக் இல்லை.... இந்திய அணியை அறிவித்த சேவாக்!

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 

Apr 25, 2024 - 12:10
இந்திய அணியில் ஹரத்திக் இல்லை.... இந்திய அணியை அறிவித்த சேவாக்!

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) சமர்ப்பிக்க மே 1-ந் தேதி கடைசி நாளாகும். 

இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி வரும் 28-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு அந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டிய வீரர்கள் குறித்து பல இந்திய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான சேவாக், தான் தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் 11-ஐ அறிவித்துள்ளார்.

அதில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை. ஆனால் சந்தீப் சர்மாவை பிளேயிங் 11-ல் சேர்த்து சேவாக் ஆச்சரியம் அளித்துள்ளார்.

ரோகித் சர்மா (கேப்டன்)
ஜெய்ஸ்வால்
விராட் கோலி
சூர்யகுமார் யாதவ்
ரிஷப் பண்ட்
ரிங்கு சிங் அல்லது ஷிவம் துபே
ஜடேஜா
குல்தீப் யாதவ்
பும்ரா
சிராஜ்
சந்தீப் சர்மா

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!