இந்திய உத்தேச அணியில் இந்த ஐந்து பினிஷர்களுக்கு இடம்? 

டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் துவங்கும். லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.

இந்திய உத்தேச அணியில் இந்த ஐந்து பினிஷர்களுக்கு இடம்? 

டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் துவங்கும். லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.

போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பௌலர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

டி20 உலகக் கோப்பைக்கான பிட்ச்கள், ஸ்லோ விக்கெட் என்பதால், அதில் அபாரமாக விளையாடக் கூடிய விராட் கோலிக்கு, ரோஹித் சர்மா உடன் ஓபனராக வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

மிடில் வரிசையில் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரிஷப் பந்த், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா என மொத்தம் 5 பினிஷர்கள் மிடில் வரிசையில் இருப்பதால், இந்திய அணி தொடர்ந்து பெரிய ஸ்கோர்களை அடிப்பதற்கு வாய்ப்புள்ளது.

பந்துவீச்சாளர்கள் இடத்தில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெறுவார்கள் எனக் கருதப்படுகிறது. டி நடராஜன் சிறந்த பௌலர் என்றாலும், அவர் ஒருசில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறார் என பிசிசிஐ கருதுவதால்தான், அவரை சேர்க்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரிஷப் பந்த், ரிங்கு சிங் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...