இப்படி அடிப்பாங்கனு எதிர்பார்க்கல.. இலங்கை கேப்டன் ஷனாக சோகம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 428 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. 

Oct 8, 2023 - 11:57
இப்படி அடிப்பாங்கனு எதிர்பார்க்கல.. இலங்கை கேப்டன் ஷனாக சோகம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 428 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. 

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 102 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தென்னாப்பிரிக்க அணி அசத்தி இருக்கிறது. 
இந்த போட்டியில் எய்டன் மார்க்கரம், டிகாக், வெண்டர் டுசன் ஆகியோர் சதம் அடித்து அசத்தினார்கள்.

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய இலங்கை அணி கேப்டன் ஷனக்கா, இன்றைய ஆட்டத்தில் அதிக ரன்கள் அடிக்கப்படும் என நான் ஏற்கனவே நினைத்தேன். 

ஆனால் மூன்று வீரர்கள் சதம் அடித்து அசத்தி விட்டார்கள். இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. எங்களுடைய பந்துவீச்சில் நாங்கள் சரியான லெங்தில் பந்து வீசவில்லை. எங்களுடைய திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை.

இதே ஆடுகளத்தில் நாங்கள் மீண்டும் விளையாடும்போது அந்த தவறை நாங்கள் மீண்டும் செய்யாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நான் தென்னாபிரிக்க அணி 350 முதல் 370 ரன்கள் வரை அடிக்கும் என நினைத்தேன். 

அந்த வகையில் நாங்கள் சுருட்டி இருந்தால் நிச்சயம் நாங்களும் ரன்கள் அடித்து நெருக்கடி கொடுத்திருப்போம். ஆனால் கூடுதலாக பல ரன்ளை நாங்கள் கொடுத்து விட்டதால் எங்களால் போட்டி கைநழுவி போய்விட்டது.

இதே போல் எங்கள் அணியில் மூன்று முக்கிய பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக இல்லை என்பதும் புரிந்து கொள்ள வேண்டும். எனினும் வீரர்களுக்கு காயம் அடைவது என்பது போட்டியின் ஒரு பகுதிதான். 

எனினும் நாங்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது மகிழ்ச்சியிருக்கிறது. பந்துவீச்சில் கூட முதல் 10 ஓவர்களை நாங்கள் சரியாகத்தான் வீசினோம். அடுத்த போட்டியில் நாங்கள் எங்களை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் என்று கூறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!