பாலியல் குற்றசாட்டுகளில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக விடுவிப்பு
உடலுறவின் போது தனுஷ்க குணதிலக்க ஆணுறையை அகற்றியதற்கு “வாய்ப்பு இல்லை” என்று நிரூபிக்கப்பட்ட சாட்சியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா – சிட்னி நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தனுஷ்க குணதிலக்க பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
உடலுறவின் போது தனுஷ்க குணதிலக்க ஆணுறையை அகற்றியதற்கு “வாய்ப்பு இல்லை” என்று நிரூபிக்கப்பட்ட சாட்சியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர், யுவதி ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்தாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஆணுறையின்றி அவர், உடலுறவில் ஈடுபட்டதாக குறித்த யுவதி ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதி தனுஷ்க குணதிலக்க கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |