5ஆவது முறையாக அவுட் ஆன சுப்மன் கில்! மாமனார் - மருமகன்  என கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

மாமனார் மருமகன் என இருவரையும் சொல்லி வைத்தார் போல் ஆண்டர்சன் விக்கெட்டுகளை எடுக்கிறார் என்று ரசிகர்கள் ஒப்பிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.  

Feb 3, 2024 - 13:07
5ஆவது முறையாக அவுட் ஆன சுப்மன் கில்! மாமனார் - மருமகன்  என கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

அதன்படி, தொடக்க ஆட்டக்காரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் ரோஹித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் களம் இறங்கிய சுப்மன் கில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த சூழலில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அவரது விக்கெட்டை 41 வயதான இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை 5-வது முறையாக வீழ்த்தி இருக்கிறார். 

முன்னதாக சச்சின் டெண்டுல்கரை 2006 ஆம் ஆண்டு ஒருமுறையும், 2007 ஆம் ஆண்டு மூன்று முறையும், 2008 ஆம் ஆண்டு ஒரு முறையும், 2011 ஆம் ஆண்டு இரண்டு முறையும், 2012 ஆம் ஆண்டு இரண்டு முறையும் என மொத்தம் ஒன்பது முறை வீழ்த்தி இருக்கிறார் ஆண்டர்சன்.

இந்நிலையில்தான் மாமனார் மருமகன் என இருவரையும் சொல்லி வைத்தார் போல் ஆண்டர்சன் விக்கெட்டுகளை எடுக்கிறார் என்றும் ஆண்டர்சனை எதிர்கொள்ளும் போது சச்சின் டெண்டுல்கருக்கு என்ன பிரச்சனை இருந்ததோ அதே பிரச்சனைதான் சுப்மன் கில்லுக்கும் இருப்பதாகவும் ரசிகர்கள் ஒப்பிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.  

அண்மையில் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவும் சுப்மன் கில்லின் அக்காவும் காரில் ஒன்றாக சென்ற வீடியோ வைரலாகிய நிலையில், சுப்மன் கில் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாராவைத்தான் திருமணம் செய்வார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!