சனி–புதன் லாப திருஷ்டி யோகம்: இன்று முதல் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும்
ஜனவரி 20ஆம் தேதி கிரகங்களின் இளவரசன் புதனும், நீதியின் கர்த்தாவாகக் கருதப்படும் சனி பகவானும் இணைந்து ‘லாப திருஷ்டி யோகம்’ எனப்படும் சுப யோகத்தை உருவாக்கியுள்ளனர்
ஜோதிடத்தின் அடிப்படையில், நவகிரகங்கள் தங்களின் நிலைமாற்றங்கள் மற்றும் பரஸ்பர தொடர்புகளின் மூலம் சுப, அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இவ்வாறான யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் வெளிப்படும்.
அந்த வகையில், ஜனவரி 20ஆம் தேதி கிரகங்களின் இளவரசன் புதனும், நீதியின் கர்த்தாவாகக் கருதப்படும் சனி பகவானும் இணைந்து ‘லாப திருஷ்டி யோகம்’ எனப்படும் சுப யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த யோகத்தின் போது சனியும் புதனும் ஒருவருக்கொருவர் 60 டிகிரி இடைவெளியில் அமைந்திருப்பதால், லாபம், முன்னேற்றம் மற்றும் நன்மைகள் அதிகரிக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இந்த யோகத்தின் தாக்கம் எல்லா ராசிகளுக்கும் பொதுவாக இருந்தாலும், குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு இன்று முதல் அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்படவுள்ளதாக நம்பப்படுகிறது. தொழிலில் முன்னேற்றம், நிதி வளர்ச்சி, கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுதல் போன்ற நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
தனுசு:
லாப திருஷ்டி யோகத்தின் பயனால் தனுசு ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு முழுமையாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். பல வழிகளில் இருந்து பணவரவு அதிகரிக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. சேமிப்புகள் பெருகும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சாதகமாக அமையும். தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். ரிஸ்க் எடுத்த முயற்சிகளிலும் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வணிகத்தில் வெற்றி காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உருவாகலாம். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல நிதி ஆதாயத்தை தரும்.
