ரோகித் சர்மா படைக்க போகும் சாதனை.... 146 ஆண்டு வரலாற்றில் முதல் முறை.... என்ன தெரியுமா?
146 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார்.
கிரிக்கெட்டில் சிக்ஸர் அடிக்கும் வீரர்களுக்கு தனி மரியாதை உள்ளது. அந்த வகையில் 146 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார்.
582 சிக்ஸர்களுடன் ரோகித் சர்மா முதலிடத்திலும், கிறிஸ் கெயில் 553 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், 476 சிக்ஸர் உடன் சையது ஆப்ரிடி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அத்துடன், 398 சிக்சர்களுடன் மெக்கல்லம் நான்காவது இடத்திலும், 383 சிக்சர்களுடன் குப்தில் ஐந்தாவது இடத்திலும்,359 சிக்ஸர்களுடன் தோனி 6வது இடத்திலும் 352 சிக்ஸர் உடன் ஜெயசூர்யா 7ஆவது இடத்திலும், 346 சிக்சருடன் இயன் மார்கன் எட்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.
500 சிக்ஸருக்கு மேல் அடித்த இரண்டு வீரர்கள் என்றால் அது ரோகித் சர்மாவும், கெயிலும் தான். ரோகித் சர்மா இன்னும் 18 சிக்சர்களை அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 600 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
இந்த ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் பல டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடுவதால் ரோகித் சர்மா 18 சிக்சர்களை இந்த ஆண்டில் பாதியிலே அடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |