நாளை ஹர்த்தால்: பாடசாலைகள் திறக்கப்படுமா!
பாடசாலைகளில் தற்போது தவணைப் பரீட்சை இடம்பெற்று வருகிறது. தரம் 6-9 வரையான மாணவர்களுக்கு வலய ரீதியிலான பரீட்சையும், தரம் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு மாகாண ரீதியிலான பரீட்சையும் நடைபெற்று வருகிறது.
வடக்கு - கிழக்கு முழுவதும் நாளை (20) நிர்வாக முடக்கலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உள்ள பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் இதுவரையில் அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை.
பாடசாலைகளில் தற்போது தவணைப் பரீட்சை இடம்பெற்று வருகிறது. தரம் 6-9 வரையான மாணவர்களுக்கு வலய ரீதியிலான பரீட்சையும், தரம் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு மாகாண ரீதியிலான பரீட்சையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் பேருந்து சேவையானது எவ்வாறு அமையும் என எதிர்வுகூற முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் நாளை பாடசாலையை நடத்துவதா இல்லையா என அந்த அந்த கல்வி வலயங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரன்ஸ் நேற்று (18) தெரிவித்துள்ளார்.
ஒரு கல்வி வலயம் பரீட்சையை வைத்து, ஒரு வலயம் பரீட்சையை பிற்போட்டால் அந்த பரீட்சை வினாத்தாள்கள் வெளியாகி விடும். இதனால் பிற்போடப்படும் பரீட்சைகள் மூலம் பிரயோசனம் இருக்காது.
நாளையதினம் பரீட்சையை நடாத்தினால் பேருந்தில் பாடசாலைக்கு வரும் மாணவர்களால் பாடசாலைக்கு வருகை தர முடியாது இருக்கும். இதனால் அவர்கள் பாதிக்கப்படுவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |