20 வருஷமா தொடரும் தோல்வி.. மாற்றி காட்டுமா தென்னாப்பிரிக்கா?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக முக்கியமான ஆட்டங்களில் ஒன்றான நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று தொடங்கியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக முக்கியமான ஆட்டங்களில் ஒன்றான நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று தொடங்கியுள்ளது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தால், பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்பு கூடுதல் பிரகாசமாகும். இதனால் நியூசிலாந்து அணிக்கு மிக முக்கிய போட்டியாக இது அமைந்துள்ளது.
இந்த நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் நட்சத்திர வீரர் ஃபெர்குசன் பெஞ்ச் செய்யப்பட்டு, அனுபவ வீரர் டிம் சவுதி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியில் ஷம்சி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரபாடா அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். புனே மைதானத்தில் ஆட்டம் நடப்பதால், பனிப்பொழிவை மனதில் வைத்து நியூசிலாந்து அணியை பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் பேசுகையில், நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம். ஆடுகளம் நன்றாக உள்ளது. ஆனால் நிச்சயம் பனிப்பொழிவு இருக்கும் என்று நினைக்கிறேன்.
லாக்கி ஃபெர்குசனுக்கு பதிலாக டிம் சவுதி இடம்பெற்றுள்ளார். எங்கள் வீரர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்கா அணி சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. அதனால் இன்றைய ஆட்டம் சிறந்த ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா பேசுகையில், நாங்கள் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம். தற்போது ஆடுகளம் உலர்வாக உள்ளது. மாலை நேரத்திற்கு பின் பந்து பிட்சில் வழுக்க வாய்ப்புள்ளது.
வெற்றியை தொடர விரும்புகிறோம். கடந்த போட்டியில் சில சொதப்பல்கள் இருந்தது. அதேபோல் முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
2003ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா ஒரு முறை கூட வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |