டி20 உலகக் கோப்பையில் தோனி? ஓபனாக பேசிய ரோஹித்.. ரசிகர்கள் உற்சாகம்!
ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பௌலர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கும். லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.
இந்நிலையில், பிட்ச்கள் குறித்த அறிக்கையை, பிசிசிஐ நிர்வாகிகள் அஜித் அகார்கரிடம் சமர்பித்துள்ளனர். அதில், போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பௌலர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கான அணி மீட்டிங்கில், விராட் கோலியை ஓபனராக களமிறக்க வேண்டும் என ரோஹித் சர்மா கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு அணி நிர்வாகமும் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிசிசிஐ பேச்சை கேட்காமல், ரஞ்சிக் கோப்பையில் ஆட மறுத்த இஷான் கிஷனை, டி20 உலகக் கோப்பையில் சேர்க்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஜிதேஷ் சர்மா, துரூவ் ஜோரலும் சரியான பார்மில் இல்லை.
ஆனால், இளம் விக்கெட் கீப்பர் பேட்டர்களைவிட சீனியர்களான மகேந்திரசிங் தோனி, தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன் போன்றவர்கள் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக, சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனியை, டி20 உலகக் கோப்பையில் ஆட வைக்க முடியுமா என்ற கேள்விதான், ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா, ''மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப சொல்லி, தோனியை சம்மதிக்க வைக்க முடியாது'' எனக் கூறினார்.
மேலும் பேசிய ரோஹித், ''மகேந்திரசிங் தோனி அமெரிக்கா வருவார். ஆனால், கிரிக்கெட் விளையாடுவதற்கு இல்லை. கோல்ப் விளையாட்டில் பங்கேற்க உள்ளார். அவ்வபோது, இந்திய அணியை சந்தித்து பேசவும் வாய்ப்பு இருப்பதாக'' ரோஹித் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |