'தளபதி 68' படம் குறித்து வெளியான அறிவிப்பு ரசிகர்கள் உற்சாகம்!

இதனால் தளபதி ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். லோகேஷ், விஜய் இருவரும் இணைந்த 'மாஸ்டர்' படத்தில் ஒருசில விஷயங்கள் மிஸ்ஸான நிலையில் லியோவை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கி தரமான சம்பவம் செய்து விட்டார் லோகேஷ் கனகராஜ். 

'தளபதி 68' படம் குறித்து வெளியான அறிவிப்பு ரசிகர்கள் உற்சாகம்!

விஜய்யின் 'லியோ' படத்திற்கு தரமான ஓபனிங் கிடைத்துள்ளது. அதிகாலையில் இருந்தே இப்படத்திற்கு அமோக வரவேற்பினை கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள். லோகேஷ் கனகராஜ், விஜய் இருவரின் மேஜிக்கில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது 'லியோ'. 

இதனால் தளபதி ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். லோகேஷ், விஜய் இருவரும் இணைந்த 'மாஸ்டர்' படத்தில் ஒருசில விஷயங்கள் மிஸ்ஸான நிலையில் லியோவை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கி தரமான சம்பவம் செய்து விட்டார் லோகேஷ் கனகராஜ். 

இதுவே படத்திற்கான மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. இதனால் இன்று ரிலீசாகியுள்ள 'லியோ' படத்தினை ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த பட இயக்குனரான வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் 'லியோ' பட போஸ்டரை பகிர்ந்து மூன்று நெருப்பு எமோஜியை பதிவிட்டிருந்தார். 

அவரின் இந்த பதிவிற்கு கீழ் ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வரும் நிலையில் 'தளபதி 68' பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, வெங்கட் பிரபுவின் பதிவை குவோட் செய்து, 'நாம் துவங்க வேண்டும்' என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த போஸ்ட் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

'லியோ' பட கொண்டாட்டத்தில் திக்குமுக்காடி போயிருந்த விஜய் ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி இருவரின் பதிவும் கூடுதல் டானிக்காக அமைந்துள்ளது. 

முன்னதாக 'லியோ' ரிலீஸ் வரையில் 'தளபதி 68' படம் குறித்த எந்தவிதமான அபிசியல் அறிவிப்பையும் வெளியிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இந்நிலையில் 'லியோ' ரிலீசான அன்றே 'தளபதி 68' படம் குறித்த பேச்சுக்கள் ஆரம்பம் ஆகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

'தளபதி 68' படத்தினை மல்டி ஸ்டார் பாணியில் இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கவுள்ளனர். 

அத்துடன் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நாயகிகளாக நடிக்கின்றனர். 'தளபதி 68' மூலமாக நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...