லியோ உண்மையை உடைத்த நடிகர்... கடும் அப்செட்டில் லோகேஷ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம் ஆகிய இரண்டு படங்களும் LCU-வில் தான் வருகிறது. எனவே, இனிமேல் அவர் இயக்கும் படங்கள் கண்டிப்பாக இந்த LCU-வில் தான் வரும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Oct 13, 2023 - 01:03
லியோ உண்மையை உடைத்த நடிகர்... கடும் அப்செட்டில் லோகேஷ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம் ஆகிய இரண்டு படங்களும் LCU-வில் தான் வருகிறது. எனவே, இனிமேல் அவர் இயக்கும் படங்கள் கண்டிப்பாக இந்த LCU-வில் தான் வரும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ஆனால், லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ள காரணத்தால் அவருக்கு இருக்கும் மார்கெட்டிற்கு அவர் எப்படி இப்படி ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பார் என்ற கேள்வியும் கோலிவுட் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது. 

லியோ படத்தின் ட்ரைலர் வெளியாகும் போது கூட அதில் இந்த படம் LCU-வில் வரும் என்பதற்கான ஒரு குறியீடு கூட இல்லை. எனவே, இந்த லியோ படம் LCU-வில் தான் வருகிறதா என்பதற்காகவே படத்தை பார்க்க பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

இதற்கிடையில்,  ரோலக்ஸ் கேங்கில்  ஒருவராக விக்ரம் படத்தில் நடித்திருந்த விஷ்வா லியோ திரைப்படம் கண்டிப்பாக LCU தான் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் ” விக்ரம் படத்தில் நான் நடித்திருந்த காரணத்தால் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் விஜய் சாரை வைத்து படம் இயக்குகிறார் என்று தெரிந்தவுடன் விஜய் சாரை பார்க்க நாங்கள் வரலாமா என்று கேட்டேன். 

அதற்கு இல்ல இல்ல தயவுசெஞ்சி வரதீங்க என்று கூறினார்கள். அதற்கு காரணம் லியோ படம் LCU-க்குள் வருவது தான். நான் ஒரு வேலை அங்கு சென்றால் அதற்கான புகைப்படங்கள் லீக் ஆகிவிடும்.

அப்படி லீக்கானல் அனைத்தும் வெளியே தெரிந்துவிடும். எனவே, இதன் காரணமாக விக்ரம் படத்தில் நடித்த யாருமே இந்த படத்திற்கு கொண்டு வரவில்லை” எனவும் விஷ்வா தெரிவித்துள்ளார். 

லோகேஷ் கனகராஜும் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். ஆனால், இதுவரை லியோ LCU தான் என்று கூறவே இல்லை ஆனால் அந்த ரகசியத்தை விஷ்வா உடைத்துள்ள காரணத்தால் லோகேஷ் சற்று அப்செட்டில் இருக்கிறாம்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!