ஒரே ஒரு போட்டியில் 5 சாதனை... பும்ராவுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு... அக்ரம், முரளிதரன் சாதனைகள் தகர்க்கப்படும்!

மான்செஸ்டர் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் பும்ரா விளையாடினால், அவர் பல்வேறு சாதனைகளைப் படைக்க வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

ஒரே ஒரு போட்டியில் 5 சாதனை... பும்ராவுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு... அக்ரம், முரளிதரன் சாதனைகள் தகர்க்கப்படும்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை மட்டும் பும்ரா வீழ்த்திவிட்டால், ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் எந்த பந்துவீச்சாளராலும் செய்ய முடியாத சாதனையை படைப்பார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2வது டெஸ்டில் பும்ரா ஓய்வில் இருந்த நிலையில், பும்ராவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் ஓய்வு அளிக்கப்படுமா என்ற கேள்வி உள்ளது.

ஆனால் இந்திய அணிக்கு இது வாழ்வா, சாவா போட்டி என்பதால் பும்ரா ஆடுவார் என பலரும் எதிர்பார்த்துள்ள நிலையில் மான்செஸ்டர் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் பும்ரா விளையாடினால், அவர் பல்வேறு சாதனைகளைப் படைக்க வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

4வது டெஸ்ட் போட்டியில் பும்ரா ஒரேயொரு விக்கெட்டை எடுத்தாலும், இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை 50 முறை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைப்பார். 

அத்துடன்,3 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினால், இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார்.

இஷாந்த் சர்மா 15 போட்டிகளில் இங்கிலாந்து மண்ணில் விளையாடி 51 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்து வரும் நிலையில், பும்ரா 11 போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 

இதனால் இன்னும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், பும்ரா புதிய சாதனையைப் படைக்க முடியும். அதேபோல் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், இன்னொரு சாதனையைப் படைக்க முடியும்.

4ஆவது டெஸ்டில் சாதனை படைக்க வாய்ப்பு.. வெறும் 60 ரன்கள் தான் தேவை... சாதிப்பாரா ராகுல்?

இங்கிலாந்து மண்ணில் 14 போட்டிகளில் விளையாடிய வாசிம் அக்ரம் 53 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் அடுத்த போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய வேகப்பந்துவீச்சாளர் என்ற புதிய மைல்கல்லை பும்ரா எட்டுவார். 

அதேபோல் 5 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்ஸில் வீழ்த்தினால், முத்தையா முரளிதரனின் சாதனையைச் சமன் முடியும். இங்கிலாந்து மண்ணில் ஆசிய பவுலர்களிலேயே அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது முத்தையா முரளிதரன் தான். 

இதன்பின் பும்ரா 4 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்தில் இருக்கிறார். இதன் மூலமாக முத்தையா முரளிதரனின் சாதனையைச் சமன் செய்ய முடியும். 

அதேபோல் SENA நாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைப்பார். இதனால் பும்ரா களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.