பிசிசிஐ அதிரடி தீர்மானம்... இந்திய வீரருக்கு 2 ஆண்டுகள் தடை... தெரிவான புதிய வீரர்!

இந்தியாவின் கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இருந்து வருகிறது.

பிசிசிஐ அதிரடி தீர்மானம்... இந்திய வீரருக்கு 2 ஆண்டுகள் தடை... தெரிவான புதிய வீரர்!

இந்தியாவின் கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இருந்து வருகிறது.

தற்போது உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய பொருளாதாரத்தையும் அதிகாரத்தையும் கொண்டுள்ள கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ இருக்கிறது. 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மிகப்பெரிய அதிகாரத்திற்கு ஐபிஎல் தொடர் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. உள்நாட்டு கிரிக்கெட்டை பலப்படுத்தினால் மட்டுமே பொருளாதாரம் மற்றும் அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைக்க முடியும் என்கின்ற காரணத்தினால், பிசிசிஐ உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை நடத்துவதில் மிகுந்த தாராளத்தை காட்டி வருகிறது.

இந்த வகையில் இந்த ஆண்டிற்கான உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ரஞ்சித் டிராபி நேற்று முதல் துவங்கியது. இந்த தொடரில் ஒடிசா அணியின் முக்கிய வீரர் ஒருவர் வயது சான்றிதழில் மோசடி செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ரஞ்சித் தொடரில் ஒடிசா அணிக்காக விளையாட இருந்த, அந்த அணியின் முக்கிய வீரர் சுமித் சர்மா வயது சான்றிதழில் மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டதால், பிசிசிஐ அவருக்கு இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதித்திருக்கிறது.

அவருக்கு பதிலாக ஒடிசா மாநில கிரிக்கெட் தேர்வாளர்கள் தாரிணி வதேராவை தேர்வு செய்திருக்கிறார்கள். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...