கோலியுடன் சவால்.. 3 முறையும் சொல்லி வைத்து வென்ற பாகிஸ்தான் வீரர்... அவரே சொன்ன சீக்ரெட்!
இந்த நிலையில் விராட் கோலியை சொல்லி வைத்து வீழ்த்தியது பற்றிய சம்பவம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜுனைத் கான் பேசியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி, ஒரு நாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதங்கள், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் என்று பல சாதனைகளை படைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என்று அத்தனை நாட்டு அணிகளையும் தனது ஆக்ரோஷ அதிரடியால் மிரட்டி வருவார்.
இந்த நிலையில் விராட் கோலியை சொல்லி வைத்து வீழ்த்தியது பற்றிய சம்பவம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜுனைத் கான் பேசியுள்ளார். ஏராளமான பேட்ஸ்மேன்களை வீழ்த்தி இருந்தாலும், ரசிகர்கள் அனைவரும் விராட் கோலியின் விக்கெட்டை தான் இன்னும் நினைவில் வைத்துள்ளார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தனது கம்பேக் தொடரில் இந்திய அணிக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் விராட் கோலியை வீழ்த்திய போது, அவர் இது மீண்டும் நடக்காது என்று தன்னிடம் கூறியதாகவும் அவர் சொல்லியுள்ளார்.
எனினும், அதன்பின் அடுத்த 2 போட்டிகளிலும் மீண்டும் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதுடன், தன்னிடமிருந்து கோலியால் தப்ப முடியவில்லை என்றும், அதிலும் மூன்றாவது ஒருநாள் போட்டில் காலை உணவு சாப்பிட்ட போது விராட் கோலியிடம் நேரடியாகவே சவால் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் வீரர்கள் எடுத்த சபதம்... நோ உருது மொழி... ஆஸ்திரேலியாவை வீழ்த்த மாஸ்டர் பிளான்
அப்போது அருகில் இருந்த யூனுஸ் கான், விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திவிடு என்று தன்னிடம் கூறியதுடன், 3வது ஒருநாள் போட்டியில் தனது பந்தில் விராட் கோலி யூனுஸ் கானிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததாக ஜுனைத் கான் பேசியுள்ளார்.
2012 - 2013 ஆண்டில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் ஜுனைத் கான் மொத்தமாக வெறும் 5 பந்துகளை மட்டும் வீசி விராட் கோலியை 3 முறை வீழ்த்தியுள்ளார். அதேபோல் பாகிஸ்தான் அணிக்காக 107 போட்டிகளில் விளையாடியுள்ள ஜுனைத் கான், 189 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |