அரையிறுதி வாய்ப்புக்கு இந்தியா இன்னும் எத்தனை போட்டியில் வெல்ல வேண்டும் தெரியுமா?

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என மூன்று அணிகள் எதிர் கொண்டு மூன்றுமே வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் தற்போது இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது.

அரையிறுதி வாய்ப்புக்கு இந்தியா இன்னும் எத்தனை போட்டியில் வெல்ல வேண்டும் தெரியுமா?

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என மூன்று அணிகள் எதிர் கொண்டு மூன்றுமே வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் தற்போது இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது.

இந்தியாவின் ரன் ரெட் 1.68 என்ற அளவில் இருக்கிறது. ஒவ்வொரு அணிகளும் ஒன்பது லீக் ஆட்டங்களில் விளையாடும். இதில் யார் முதல் நான்கு இடங்களை பிடிக்கிறார்களோ அவர்கள் அரை இறுதி சுற்றுக்கு செல்வார்கள். 

இந்த நிலையில் இந்திய அணி பலம் வாய்ந்த இரண்டு அணிகளை வீழ்த்திவிட்டது. இன்னும் இந்தியா வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து என மூன்று பலம் குன்றிய அணிகளை எதிர்கொள்ள உள்ளது.

இதில் நெதர்லாந்து மற்றும் வங்கதேசத்தை இந்தியா எளிதில் வீழ்த்தி விடலாம் என வைத்துக்கொள்வோம். அப்படி இருக்க இந்திய அணி மொத்தம் ஐந்து போட்டிகளை வென்று 10 புள்ளிகள் பெற்று விடும் எஞ்சியுள்ள இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் எதிரான போட்டியில் இந்திய அணி குறைந்தது ஒன்றில் வெற்றி பெற்றால் போதுமானது.

இதன் மூலம் இந்தியாவுக்கு 12 புள்ளிகள் கிடைத்துவிடும். ஆனால் இந்திய அணி தற்போது இருக்கும் பார்மை பார்த்தால் எஞ்சியுள்ள ஆறு போட்டிகளில் அதிகபட்சம் ஆறிலும், குறைந்தபட்சம் நான்கிலும் வெற்றி பெறும். 

இதன் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் அதிகபட்சமாக 18 புள்ளிகளையும் குறைந்தபட்சமாக 14 புள்ளிகளையும் பெற வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் முதல் நான்கு இடங்களை ஈசியாக இந்திய அணி பெற்றுவிடும். இதனால் அரை இறுதி வாய்ப்பு இந்தியாவுக்கு நிச்சயம் கிடைத்துவிடும்.

இந்த நிலையில் இந்தியா முதலிடத்தை பிடித்தால் அரை இறுதியில் நான்காவதாக எந்த அணி தகுதி பெறுகிறதோ அவர்களுடன் விளையாட வாய்ப்பு இருக்கிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில் டாப் நான்கில் கொஞ்சம் பலம் குன்றிய அணிகளை சந்திக்க இந்தியாவுக்கு வாய்ப்பு ஏற்படும். எனினும் அதீத நம்பிக்கையில் விளையாடாமல் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா விளையாடினால் நிச்சயம் அரையிறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெறும். 

தற்போது இந்திய அணி தங்களுடைய அடுத்த போட்டியில் வங்கதேசத்தை வரும் 19ஆம் தேதி பூனேவில் எதிர்கொள்கிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...