ஐசிசி உலக கோப்பை 2023 - பட்டையை கிளப்பவுள்ள  5 வேகப்பந்துவீச்சாளர்கள் இவர்கள்தான்!

ஐசிசி உலக கோப்பை 2023: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் தொடர் என்பதால் சுழல் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Sep 30, 2023 - 18:51
Sep 30, 2023 - 18:52
ஐசிசி உலக கோப்பை 2023 - பட்டையை கிளப்பவுள்ள  5 வேகப்பந்துவீச்சாளர்கள் இவர்கள்தான்!

ஐசிசி உலக கோப்பை 2023: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் தொடர் என்பதால் சுழல் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆனால் இந்த தொடரில் வேகப்பந்துவீச்சாளர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும், இந்த உலகக் கோப்பையில் ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள் கவனத்தை ஈர்ப்பார்கள் என்றும்  தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

ஸ்டெயின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் முகமது சிராஜ். சிராஜ் அண்மையில் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

சிராஜ் தன்னுடைய வித்தியாசமான வேகப்பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சிரமத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டெயினின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் ரபாடா. ரபாடா தன்னுடைய வேகத்தால் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவரை நிலை குலைய வைப்பார். 

இதையும் படிங்க: ஐசிசி உலக கோப்பை 2023 - அடுத்த சூப்பர் ஸ்டார்களாக வர வாய்ப்புள்ள 5 இளம் வீரர்களை கவனித்தீர்களா?

ஸ்டெயின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் பாகிஸ்தான் வேகபந்துவீச்சால் ஷாகின் அப்ரிடி. தன்னுடைய அதிவேக இடதுகை பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பதில் ஷாகின் அப்ரிடி வல்லவர். 

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் நியூசிலாந்து வீரர் டிரெண்ட் பவுல்ட். இடது கை வேகப்பந்து வீச்சில் கலக்கக்கூடிய நபர் தான் பவுல்ட். பவுல்ட் சமீப காலமாக நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதனால் இந்த உலகக் கோப்பையில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் இங்கிலாந்து அணியின் மார்க் வுட். தன்னுடைய வேகத்தால் ரன்களை கட்டுப்படுத்தக்கூடியதில் வல்லவர். குறிப்பாக இறுதிக்கட்டத்தில் யாக்கர் லெங்த் பந்துவீச்சை வீசி அசத்துவார். 

ஸ்டெயினின் இந்த பட்டியலில் இந்தியாவின் பும்ரா இடம்பெறவில்லை.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!