பாகிஸ்தானுக்கு இலங்கை வைத்த ஆப்பு.. இங்கிலாந்து காலி.. இந்தியாவின் நிலைமை என்ன?
2023 உலகக்கோப்பை தொடரின் 25வது போட்டி இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2023 உலகக்கோப்பை தொடரின் 25வது போட்டி இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் முடிவில் உலகக்கோப்பை லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை தாண்டி ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியது.
தற்போது ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ளது. மறுபுறம் 2019 உலகக்கோப்பை சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகளின் முடிவில் ஒன்பதாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த 25 போட்டிகளின் முடிவில் அனைத்து அணிகளும் தலா ஐந்து லீக் போட்டிகளில் ஆடி உள்ளன. இதன் முடிவில், புள்ளிப் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
இந்தியா மட்டுமே ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் இருக்கும் ஒரே அணி ஆகும். அடுத்த இரண்டு இடங்களில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 8 புள்ளிகளுடன் உள்ளன.
அந்த இரு அணிகளுமே தலா ஒரு தோல்வியை சந்தித்து இருக்கின்றன. நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியா 6 புள்ளிகளுடன் உள்ளது. ஐந்தாவது இடத்தில் இருந்து தான் புள்ளிப் பட்டியலில் சிக்கல் ஆரம்பிக்கிறது.
தற்போது இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுமே ஐந்து போட்டிகளில் இரு வெற்றிகள் மட்டும் பெற்று நான்கு புள்ளிகளுடன் ஐந்து, ஆறு மற்றும் ஏழாவது இடத்தில் உள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு போட்டியாக உள்ள இந்த மூன்று அணிகளில் ஒரு அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? அல்லது ஆஸ்திரேலியா அந்த அணிகளை முன்னேற விடாமல் தன் நான்காவது இடத்தை தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு வெற்றி மட்டுமின்றி நெட் ரன் ரேட்டும் முக்கியம். அதை வைத்தே அரை இறுதிக்கான நான்காவது அணி தேர்வு செய்யப்படும் நிலையே தற்போது உள்ளது.
வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் ஐந்து போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் எட்டு, ஒன்பது மற்றும் பத்தாவது இடத்தில் உள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |