ஆப்கானிஸ்தான் தோல்வியால் ஏற்பட்டுள்ள மாற்றம்.. இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதி மோதுமா?
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி நேற்று இடம்பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அரை இறுதிப் போட்டி நடக்க வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவே பார்க்கப்படுகின்றது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
எதிர்வரும் போட்டியில் தோற்றால் கூட ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் நீடிக்கும் என்பதுடன், முதல் இரண்டு இடங்களில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரை இறுதிக்கு செல்லும் நான்கு அணிகளில், நான்காவது இடத்துக்கு முன்னேற நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.
மூன்று அணிகளும் தற்போது தலா 8 புள்ளிகளுடன் உள்ளதுடன், மூன்று அணிகளுக்கும் தலா ஒரு லீக் போட்டி எஞ்சியுள்ளது.
மூன்று அணிகளும் தங்களது போட்டிகளில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெறுவதுடன்,
அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் நான்காவது இடத்தை பிடிக்கும் அணி தெரிவு செய்யப்படும்.
தனது கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக பெரிய வெற்றியை பதிவு செய்தால் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடம் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெறும்.
பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றால், முதல் இடத்தில் உள்ள இந்தியாவுடன் தான் மோதும் என்பதால், இந்தியா - பாகிஸ்தான் அரை இறுதி போட்டி நடைபெற வாய்ப்பு அதிகரித்து உள்ளது.
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் அணிக்கு இருக்கும் அதே வாய்ப்பு நியூசிலாந்து அணிக்கும் உள்ளதை மறுக்க முடியாது.
நியூசிலாந்து அணி தன் கடைசி லீக் போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளை விட அதிக நெட் ரன் ரேட் பெற்றால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணி தன் கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியுடன் மோத உள்ளதால் அதில் வெற்றி பெற வாய்ப்பு குறைவு என கூறப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |