மும்பை அணியை வீழ்த்த தோனி போட்ட பக்கா பிளான்! என்ன செய்ய போகிறார் தெரியுமா?
ஐபிஎல் 2025 தொடரில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஐபிஎல் 2025 தொடரில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் கடைசியாக விளையாடிய போட்டியில் வெற்றியை பெற்றது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் இறுதியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை பெற்றது.
இந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் இருந்தாலும் அடுத்து வரும் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என தோனி நினைக்கிறார்.
அதற்காக, சிஎஸ்கே அணியின் பலவீனத்தை கண்டறிந்து அதனை சரிசெய்து கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை ஏற்றவுடன் அதனை மாற்றினார்.
ஒழுங்காக விளையாடாத ராகுல் திரிபாதி, டெவோன் கான்வே இருவரையும் வெளியேற்றி அவர்களுக்கு பதிலாக ஷேக் ரசீத் என்ற இளம் பிளேயரை ஓப்பனிங் இறக்கினார்.
அதேநேரத்தில், மிடில் ஆர்டரில் விஜய் சங்கருக்கு பதிலாக இன்னொரு வீரர்க வேண்டும் என்று உடனடியாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் டெவால்ட் ப்ரீவிஸை ஒப்பந்தம் செய்தார்.
அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பிளேயர் என்ற நிலையில், அவரை இப்போது அணியில் சேர்த்திருக்கும் தோனி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கவும் முடிவு செய்திருக்கிறார்.
கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் விளையாடியதால் அந்த மைதானம் குறித்த புரிதல் அவருக்கு இருக்கும். எனவே டெவால்ட் ப்ரீவிஸ் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பயன்படுத்தலாம் என்ற தீர்மானத்தில் உள்ளார் தோனி.
அத்துடன், பந்துவீச்சிலும் அதிரடி மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ள தோனி, கலீல் அகமது, நூர் அகமதுடன் மதீஷா பத்திரனா ஆகியோர் மெயின் பந்துவீச்சாளர்களாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.
ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை சுழற்பந்துவீச்சுக்கு வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ள தோனி, அஸ்வினுக்கு அணியில் இடம் கொடுக்கக்கூடாது என்ற முடிவிலும் இருக்கிறார்.
ஏனென்றால் அணிக்குள் காம்பினேஷன் அமைந்துவிட்டால் தோனி அதனை மாற்றமாட்டார். அந்தவகையில் எல்லா பிளானும் தயாராக இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றியை சுவைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகின்றது.