ஒலிம்பிக்கில் சேர்க்கப்படுகின்றது கிரிக்கெட்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
கிரிக்கெட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை சர்வதேச ஒலிம்பிக் பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
கிரிக்கெட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை சர்வதேச ஒலிம்பிக் பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டை இணைத்துக்கொள்வதகான பரிந்துரை மும்பையில் இடம்பெற்ற சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
இதன்போதே இந்த பரிந்துரையை சர்வதேச ஒலிம்பிக் பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து மும்பையில் இம்மாதம் 14 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் பேரவை அமர்வில் குறித்த பரிந்துரை வாக்கெடுப்பிற்கு விடப்படும்.
ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளிலும் ஆறு அணிகள் பங்கேற்கும் வகையில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம் என்று ஐசிசி, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் குழுவிடம் பரிந்துரை செய்திருந்தது.
அவ்வகையில், ஐசிசி டி20 போட்டித் தரவரிசையில் முதல் ஆறு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியும்.
இதேவேளை,1900 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒலிம்பிக்கில் இறுதியாக கிரிக்கெட் விளையாடப்பட்டது. அப்போட்டியில், பிரித்தானியாவை பிரான்ஸை தோற்கடித்து, தங்கம் வென்றது.
இரண்டுநாள் இடம்பெற்ற இந்த போட்டியில் நான்கு இன்னிங்ஸ்கள் விளையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.