1724 ஓட்டங்கள்... சச்சினின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த கோலி.. யாராலும் எட்ட முடியாத சாதனை!

விராட் கோலி, இந்தியன் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகத்தான சாதனையை முறியடித்துள்ளார்.

Dec 29, 2023 - 13:55
1724 ஓட்டங்கள்... சச்சினின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த கோலி.. யாராலும் எட்ட முடியாத சாதனை!

இந்தியா, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் விராட் கோலி, இந்தியன் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகத்தான சாதனையை முறியடித்துள்ளார்.

முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 245 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 405 ரன்களும் குவித்து ஆல் அவுட் ஆனது.  முதல் இன்னிங்ஸை விளையாடிய விராட் கோலி 64 பந்துகளில் 38 ரன்கள் குவித்து இருந்தார். 

பின்னர் 163 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 0 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். 

10 இன்னிங்ஸிலும் சொதப்பல்.. கேப்டன்சி பதவிக்கே சிக்கல்... சோகத்தில் ரோகித் சர்மா!

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களில் நடையைக் கட்டினார். தொடக்க ஆட்டக்காரர்கள் கூடிய விரைவில் விக்கெட்டுகளை இழந்த போதும் விராட் கோலி தனது அனுபவத்தைப் பயன்படுத்தி நிலையாக நின்றார். 

கில் 26 ரன்கள் குவிக்க, பின்னால் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. விராட் கோலி மீது அழுத்தம் அதிகமாக இருந்தாலும், ஆப்சைடுக்கு வெளியே செல்லும் பந்துகளை மிகக் கவனமாக எதிர்கொண்டார். 

இருப்பினும் பின்னால் வந்த இந்திய வீரர்கள் சரியான ஒத்துழைப்பை வழங்காமல் போக இந்திய அணி 131 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஒரு இன்னிங்ஸ் மட்டும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி மட்டுமே அதிகபட்சமாக 76 ரன்கள் குவித்தார். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய தனிநபர் அதிகபட்ச ரன்களில் சச்சின் டெண்டுல்கரின் 1724 ரன்கள் சாதனையை முறியாடித்தார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 38 போட்டிகளில் விளையாடி 6 சதங்களுடன் 1724 ரன்கள் குவித்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது.

இதனைத் தற்போது விராட் கோலி முறியடித்து 29 போட்டியில் விளையாடி 5 சதங்களுடன் 1750 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து தற்போது முதல் இடத்தில் உள்ளார். 

மூன்றாவது இடத்தில் ராகுல் டிராவிட் 22 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உட்பட 1136 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு அடுத்து சவுரவ கங்குலி 17 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 897 ரன்கள் குவித்துள்ளார். அடுத்து எம் எஸ் தோனி 32 போட்டிகளில் விளையாடி 872 ரன்கள் குவித்துள்ளார். 

மேலும் விராட் கோலி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அனைத்து வடிவங்களிலும் 50க்கு மேல் சராசரி வைத்துள்ளார். மேலும் ஒரு நாள் போட்டிகளில் 74.83 சராசரியுடன் 898 ரன்கள் குவித்து இந்திய பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!