பிரித்தானியாவில் அகதிகளுக்கு இனி நிரந்தர புகலிடம் கிடையாது: உள்துறைச் செயலரின் அதிரடி அறிவிப்பு
பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் ஐந்து ஆண்டுகள் அகதி நிலையில் தங்கி, பின்னர் நிரந்தரத் தங்குதடைக்கு (ILR) விண்ணப்பிக்கலாம். அதன் பின்னர் குடியுரிமை பெறும் வாய்ப்பும் உள்ளது.
பிரித்தானியாவின் புதிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், புலம்பெயர்தலை கட்டுப்படுத்த பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எல்லைகளைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வேன் என்ற அவரது வாக்குறுதியினைப் போலவே, புதிய கொள்கை மாற்றங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.
தற்போது பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் ஐந்து ஆண்டுகள் அகதி நிலையில் தங்கி, பின்னர் நிரந்தரத் தங்குதடைக்கு (ILR) விண்ணப்பிக்கலாம். அதன் பின்னர் குடியுரிமை பெறும் வாய்ப்பும் உள்ளது.
ஆனால், ஷபானா முன்வைக்கும் புதிய திட்டப்படி, இந்நிலை மாற்றப்பட உள்ளது. இனி பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் தற்காலிக தங்க அனுமதி மட்டுமே பெறுவார்கள். அவர்களின் சொந்த நாட்டில் நிலைமை பாதுகாப்பானதாக மாறினால், பிரித்தானியா அவர்களை மீண்டும் தாய்நாட்டிற்கு அனுப்பும் நடவடிக்கைகளுக்கு வடிவமைக்கப்படுகிறது.
இதற்கிடையில், பிரித்தானிய அரசியலில் உயர்ந்த பதவிகளை வகித்த பலர் புலம்பெயர்தல் பின்னணியைக் கொண்டிருந்தாலும், அவர்கள் புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையே ஆதரித்திருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், முன்னாள் உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேல் ஆகியோர் அதற்கு உதாரணம். இப்போது பாகிஸ்தான் பின்னணியைக் கொண்ட ஷபானா மஹ்மூத் கூட அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
