திடீரென்று வந்த செய்தி.. வர்ணணையில் இருந்து விலகல்... சோகத்தில் கவாஸ்கர்!

வெஸ்ட் இண்டீஸ் வேகபந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் சிரமமான காலத்தில் தன்னுடைய அறிமுகத் தொடரிலே 700 ரன்கள் மேல் அடித்து கவாஸ்கர் சாதனை படைத்தார்.

Feb 3, 2024 - 12:47
திடீரென்று வந்த செய்தி.. வர்ணணையில் இருந்து விலகல்... சோகத்தில் கவாஸ்கர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக விளங்கிய கவாஸ்கர், அவருடைய காலத்தில் அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை வைத்திருக்கின்றார்.

வெஸ்ட் இண்டீஸ் வேகபந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் சிரமமான காலத்தில் தன்னுடைய அறிமுகத் தொடரிலே 700 ரன்கள் மேல் அடித்து கவாஸ்கர் சாதனை படைத்தார்.

ஆனால் தற்போதைய தலைமுறைக்கு கவாஸ்கரை வெறும் ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராக தான் தெரியும். 74 வயதிலும் சுனில் கவாஸ்கர் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். 

நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனை... இந்திய அணி செய்த வரலாற்று சம்பவம்!

இந்த நிலையில் இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வழக்கம் போல் கவாஸ்கர் வர்ணனை செய்து கொண்டு இருந்தார். 

அப்போது திடீரென்று கவாஸ்கர் குடும்பத்தில் அவருடைய மாமியார் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. இதனால் பதறிப்போன கவாஸ்கர் திடீரென்று விலகி நேரடியாக கான்பூருக்கு புறப்பட்டு சென்றார்.

கவாஸ்கரின் மனைவி கான்பூரில் உள்ள பெரிய தொழிலதிபரின் மகளாவார். முன்னர் ஒரு பெண் கவாஸ்கர் இடம் ஆட்டோகிராப் கேட்டுள்ளார். அப்போது அவரது அழகில் மயங்கி கவாஸ்கர் திருமணம் செய்து கொண்டார். 

கவாஸ்கர் அவருடைய திருமணத்திற்கு பிறகு மேலும் பல உயரத்தை தொட கவாஸ்கரின் மாமியார் அவருக்கு நல்ல உறுதுணையாக இருந்தாராம். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!