கொழும்பில் உள்ள கால்வாய் மற்றும் வடிகால் கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி பணிப்புரை

டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள கால்வாய் மற்றும் வடிகால் கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பு மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார்.

டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் குப்பை மற்றும் கழிவுநீரை முறையாக அகற்றுவது குறித்து நிலையான தீர்வுகளுடன் கூடிய திட்டத்தைத் தயாரிக்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, அது குறித்த திட்டங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் கூறியுள்ளார்.