"ஏலியன்" போல இருந்த குழந்தை.. அரிதான பிறவிக் குறைபாடு – மருத்துவர்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானில் பிறந்த ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையில் உலகில் மிகவும் அரிதாகக் காணப்படும் பிறவிக் குறைபாடு ஒன்று மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

"ஏலியன்" போல இருந்த குழந்தை.. அரிதான பிறவிக் குறைபாடு – மருத்துவர்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானில் பிறந்த ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையில் உலகில் மிகவும் அரிதாகக் காணப்படும் பிறவிக் குறைபாடு ஒன்று மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பச்சிளம் குழந்தைக்கு இரண்டு ஆண்குறிகள் இருந்துள்ளன. இரண்டுமே முழுமையாக வளர்ந்த நிலையிலும் செயல்படும் நிலையில் இருந்துள்ளன.

அந்த குழந்தையில் “டிஃபாலியா” எனப்படும் பிறவி முரண்பாடு காணப்பட்டதாகவும், பிறந்தவுடன் குடல் வழிபாதையில் குறைபாடுகள் இருந்ததால் உடனடி அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

“டிஃபாலியா” என்பது ஆண் குழந்தைகளில் மிகவும் அரிதாகக் காணப்படும் ஒன்றாகும். உலகில் பல மில்லியன் பிறப்புகளில் ஒருவருக்கு மட்டுமே இது ஏற்படும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

அந்த குழந்தைக்கு இரண்டு ஆண்குறிகளும் சாதாரணமாகவே இருந்துள்ளது. மேலும், இரண்டுக்கும் தனித்தனி சிறுநீர்ப்பாதை திறப்புகள் இருந்தன. மேலும், அக்குழந்தைக்கு இரண்டு ஆண்குறிகள் வழியாகவும் சிறுநீர் வந்துள்ளது.

மேலும், அந்த குழந்தைக்கு அப்போது ஆசனவாயும் இல்லையாம். குழந்தையை பார்த்த சிலர் அக்குழந்தை வினோதமாக ஏலியன் போல இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தக் குழந்தையில் ஏற்பட்டிருந்த அமைப்பு முரண்பாடு காரணமாக சிறுநீரக மற்றும் குடல் தொடர்பான சிக்கல்கள் இருந்ததால், மருத்துவர் குழு உடனடியாக குழந்தைக்கு பாதுகாப்பான வழியில் அறுவை சிகிச்சை செய்தனர்.

குழந்தையின் சிறுநீர்விடும் திறன் சீராக இருந்ததால், அவசரநிலையின்றி படிப்படையாகத் தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடிந்தது. அதிகப்படியான அல்லது முழுமையாக செயல்படாத உறுப்புகள் இருந்தால், அவற்றை மருத்துவர்கள் பாதுகாப்பாக அகற்றுவது வழக்கமான முறையாகும்.

இந்த பிறவிக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு இன்னும் உறுதிப் பதில் கிடைக்கவில்லை. எனினும் கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்களில் எம்ப்ரியோ வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கான காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த அரிய நிலை இருந்தபோதிலும், மருத்துவர்களின் தகுந்த நடவடிக்கையால் குழந்தையின் நிலை தற்போது பாதுகாப்பாகச் சிகிச்சை பெற்று வருகிறது.