இஷான் கிஷன் செய்த காரியம்... உச்சகட்ட கோபத்தில் பிசிசிஐ

இந்திய வீரர் இஷான் கிஷன் பிசிசிஐ ஒப்பந்தத்தை இழந்த நிலையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும், பிசிசிஐ விதி ஒன்றை மீறியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

Mar 2, 2024 - 13:26
இஷான் கிஷன் செய்த காரியம்... உச்சகட்ட கோபத்தில் பிசிசிஐ

இந்திய வீரர் இஷான் கிஷன் பிசிசிஐ ஒப்பந்தத்தை இழந்த நிலையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும், பிசிசிஐ விதி ஒன்றை மீறியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து இஷான் கிஷன் தாமாக விலகிய நிலையில், உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்குமாறு பிசிசிஐ கூறியும் அதை செய்யவில்லை.

பின்னர், ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை நகருக்குள் நடைபெறும் உள்ளூர் தொடரான டிஒய் பாட்டில் டி20 தொடரில் பங்கேற்றார். அதில் பங்கேற்ற இஷான் கிஷன் தனது இந்திய அணி உபகரணங்களை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

கேன் வில்லியம்சனுக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சோகம்.. வைரலாகும் வீடியோ!

அப்படி அவர் அணிந்து இருந்த ஹெல்மட்டில் பிசிசிஐ சின்னம் இடம் பெற்று இருந்தது. இந்திய அணி உபகரணங்களை வேறு தொடர்களில் பயன்படுத்தும் போது அதை மறைத்து விட்டு பயன்படுத்தலாம். அப்படி செய்யாவிட்டால், அந்த வீரர் பிசிசிஐ விதியை மீறியதாக கருதப்படும்.

இது இவ்வாறு இருக்க பிசிசிஐ பேச்சை கேட்காமல், உள்ளூர் டெஸ்ட் போட்டிகளை புறக்கணித்த இஷான் கிஷன், பிசிசிஐ ஒப்பந்தத்தை இழந்தார். 

தற்போது பிசிசிஐ-யின் அடிப்படை விதிகளில் ஒன்றான அதன் சின்னத்தை பயன்படுத்துவதிலும் தவறு செய்ததால், இதற்கு பிசிசிஐ என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஷான் கிஷன், இனி இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் 2024 ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அடுத்த ஒரு வருடத்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய பின்னரே இந்திய அணியில் இடம் கிடைக்கும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!