பிரித்தானியாவில் சமூக ஊடக தளத்தை பயன்படுத்துவதற்கான வயது வரம்பை உயர்த்த கோரிக்கை
இந்த புள்ளிவிவரம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் லார்ட் நாஷ், “இந்த எண்ணிக்கை ஆழ்ந்த கவலைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் 3 முதல் 5 வயதுக்குட்பட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
சமூக நீதி மையம் (Centre for Social Justice – CSJ) வெளியிட்ட இந்த பகுப்பாய்வில், ஆய்வில் பங்கேற்ற 10 பெற்றோரில் 4 பேர், தங்கள் குழந்தைகள் குறைந்தது ஒரு சமூக ஊடக தளத்தையாவது பயன்படுத்துவதாக கூறியுள்ளனர்.
இந்த புள்ளிவிவரம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் லார்ட் நாஷ், “இந்த எண்ணிக்கை ஆழ்ந்த கவலைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கான வயது வரம்பை உயர்த்துமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP மற்றும் GOOGLE NEWS பக்கத்தில் இணையுங்கள்.