வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஜூனியரின் நிச்சயதார்த்தம்; வெளியான அறிவிப்பு
டிரம்பின் முதல் மனைவி இவானா டிரம்புக்கு பிறந்த டிரம்ப் ஜூனியர், தொழிலதிபராகவும், தொலைக்காட்சி பிரபலமாகவும் அறியப்படுகிறார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முதல் மகனான டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் நிச்சயதார்த்த விழா வெள்ளை மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு தனியார் முறையில் நடைபெற்றாலும், அது சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
டிரம்பின் முதல் மனைவி இவானா டிரம்புக்கு பிறந்த டிரம்ப் ஜூனியர், தொழிலதிபராகவும், தொலைக்காட்சி பிரபலமாகவும் அறியப்படுகிறார். 2005-ஆம் ஆண்டு மாடல் வனேஸ்ஸாக்கு திருமணம் செய்து கொண்ட இவருக்கு அவருடன் ஐந்து குழந்தைகள் உள்ளனர். இருவரும் 2018-இல் விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்துக்குப் பிறகு, டிரம்ப் ஜூனியர் கடந்த ஆண்டு முதல் பெட்டினா ஆண்டர்சன் என்பவருடன் உறவை வளர்த்து வந்தார். இந்த உறவு தற்போது நிச்சயதார்த்தத்தில் கொண்டு வந்து நிற்கிறது.
