தோனிக்கு இப்படி நடந்ததே இல்லை.. சிஎஸ்கே ரசிகர்கள் கடும் சோகம்!

தோனி தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனதால்  சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 

May 6, 2024 - 11:42
தோனிக்கு இப்படி நடந்ததே இல்லை.. சிஎஸ்கே ரசிகர்கள் கடும் சோகம்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தபோது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி ஒன்பதாவது வரிசையில் பேட்டிங் இறங்கினார். 

இதுவரை மூன்றாம் வரிசையில் இருந்து எட்டாம் வரிசை வரை பேட்டிங் செய்துள்ள தோனி 2024 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்போது அவர் ஒன்பதாவது வரிசையில் பேட்டிங் இறங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

இதன்போது, தோனி தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனதால்  சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 

முதலில் பேட்டிங் செய்த  சிஎஸ்கே அணி விரைவாக விக்கெட்களை இழந்த நிலையில் தோனி ஏழு அல்லது எட்டாவது வரிசையில் பேட்டிங் இறங்குவார் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்தனர்.

ஆனால் மிட்செல் சான்ட்னர் மற்றும் ஷர்துல் தாக்குர் போன்றவர்கள் தான் ஏழு மற்றும் எட்டாம் வரிசையில் பேட்டிங் இறங்கினர். 

ஒன்பதாவது வரிசையில்தான் பேட்டிங் செய்ய வந்த  தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் அவரால் தொடர்ந்து ரன் ஓட முடியாது என கூறப்படுகிறது.

அவர் வழக்கம் போல கடைசி ஓவரில் சிக்ஸர்களாக அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் தான் சந்தித்த முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்ததுடன், தொடர்ந்து பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியடைந்தது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!