பிரித்தானியாவின் 2025 இலையுதிர்கால பட்ஜெட்: வரி உயர்வுகள், அறிவிக்கப்பட்ட புதிய வரி திட்டங்கள்
பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான இலையுதிர்கால பட்ஜெட்டில் முதலீட்டாளர்களுக்கான சலுகைகள் விரிவாக்கப்படுவதோடு, வீடமைப்பு வரிகளில் உயர்வு, நலத்திட்ட மாற்றங்கள் மற்றும் வருமான வரி வரம்பு உறைவு போன்ற முக்கிய நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், 2025 ஆம் ஆண்டுக்கான இலையுதிர்கால பட்ஜெட்டை வெளியிட்டுள்ளார். இந்த பட்ஜெட்டில் முதலீட்டாளர்களுக்கான சலுகைகள் விரிவாக்கப்படுவதோடு, வீடமைப்பு வரிகளில் உயர்வு, நலத்திட்ட மாற்றங்கள் மற்றும் வருமான வரி வரம்பு உறைவு போன்ற முக்கிய நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
முதலீட்டு சலுகைகள் விரிவாக்கம்
Venture Capital மற்றும் Enterprise Investment Trust (EIS/SEIS) திட்டங்களில் முதலீட்டு வரம்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 2026 முதல் முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு 20 மில்லியன் பவுண்டு வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
EMI (Enterprise Management Incentive) திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டு, பங்குச் சலுகை வழங்கும் உரிமை 250 ஊழியர்களிலிருந்து 500 பேருக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்நிலை வீடுகளுக்கு Council Tax உயர்வு
2 மில்லியன் பவுண்டைத் தாண்டும் மதிப்புள்ள வீடுகளுக்கு கூடுதல் £2,500 மற்றும் 5 மில்லியன் பவுண்டைத் தாண்டும் வீடுகளுக்கு கூடுதல் £7,500 வசூலிக்கப்படும். இந்த மாற்றம் மூலம் அரசுக்கு 400 மில்லியன் பவுண்டு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதிய மாற்றம்
2029 முதல் Salary Sacrifice Pension திட்டத்திற்கு £2,000 வரம்பு விதிக்கப்படுகிறது.
வருமான வரி உறைவு 2031 வரை
வருமான வரி தளங்கள் 2031 வரை மாற்றப்படாத நிலையில் நீடிக்கும். இதனால் “stealth tax” எனப்படும் மறைமுக வரிச்சுமை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
நலத்திட்ட மாற்றம்
Universal Credit இல் உள்ள “இரண்டு குழந்தை வரம்பு” ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 5.6 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக £5,310 கூடுதல் நன்மை கிடைக்கும்.
சந்தை தாக்கம்
-
வங்கிகள் மற்றும் செல்வ மேலாண்மை (Wealth Management) நிறுவனங்களின் பங்குகள் உயர்வு கண்டன.
-
வீடமைப்பு நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
-
Morningstar, Invesco போன்ற முதலீட்டு நிறுவனங்கள் பிரித்தானிய பத்திரங்கள் (gilts) குறித்து நேர்மறையான முன்னறிவிப்புகளை வெளியிட்டன.
எதிர்க்கட்சியின் விமர்சனம்
எதிர்க்கட்சித் தலைவர் கெமி பாடெனோக், இந்த பட்ஜெட்டை “smorgasbord of misery” என கடுமையாக விமர்சித்து, நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரினார்.
