இன்றைய ராசிபலன் – 16 அக்டோபர் 2023 - Today Rasi Palan

இன்றைய ராசிபலன் - 16 அக்டோபர் 2023. Today Rasi Palan for Thursday, October 16th, 2023: இன்றைய ராசிபலன்களை நமது Colomboதமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Oct 16, 2023 - 11:18
இன்றைய ராசிபலன் – 16 அக்டோபர் 2023 - Today Rasi Palan

இன்றைய ராசிபலன் - 16 அக்டோபர் 2023.

இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 12.47 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று பிற்பகல் இரவு 08.17 வரை சுவாதி. பின்னர் விசாகம். ரேவதி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம்

தொழில் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சனைகளில் சுமூகமான முடிவு காண்பீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்து தலை நிமிர்ந்து நிற்பீர்கள். மனதிற்குப் பிடித்த பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். தாயாரின் இடுப்பு வலியை போக்குவதற்கு பெல்ட் வாங்கி கொடுப்பீர்கள்.

ரிஷபம்

அக்கம் பக்கத்து சில்லறை சண்டையில் மாட்டிக் கொள்வீர்கள். இருப்பினும். அதை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வெளியூர் பயணங்களில் விரும்பத்தகாத செயல்களை எதிர்கொள்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தந்தையாருக்கு கண் புரை நோய்க்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வீர்கள்..

மிதுனம்

நினைத்த காரியத்தை நிதானமாக நிறைவேற்றுவீர்கள். உங்கள் வாக்கு வன்மையால் வியாபாரத்தில் வருமானத்தைப் பெருக்குவீர்கள். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறி கொள்வீர்கள். மகனுக்கு பைக் வாங்கி பரிசளித்து சந்தோஷப்படுவீர்கள். உறவினர்களின் பிரச்சினையைத் தீர்க்க உதவி செய்வீர்கள்.

கடகம்

வியாபாரத்தை விரிவுபடுத்த வித்தியாசமாக சிந்திப்பீர்கள். தொழில்துறை போட்டிகளை தகர்த்து எறிவீர்கள். சில நேரங்களில் மற்றவர் பேச்சுகளை தவறாக புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயணம் செல்ல ஏற்பாடு செய்வீர்கள். நீங்கள் நல்ல காரியங்களை செய்து மற்றவர்களின் புகழ்ச்சியை பெற்று பெருமிதம் கொள்வீர்கள்.

சிம்மம்

நீங்கள் விரும்பாத இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் மிகுந்த அல்லல்படுவீர்கள். குழந்தை பாக்கியம் ஏற்பட்டு குதூகலம் அடைவீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சியில் இறங்கி வெற்றி கொடி நாட்டுவீர்கள். காதலியின் மன வருத்தத்தை போக்குவீர்கள். பழைய கடன்களை பக்குவமாக வசூல் செய்வீர்கள்.

கன்னி

ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத ஏற்றம் அடைவீர்கள். கலைஞர்கள் தங்குதடையின்றி புதிய வாய்ப்பைப் பெறுவீர்கள். கடுமையான நோய் தாக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை குறைப்பீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வை பெறுவீர்கள்.

துலாம்

பண வரத்து அதிகமாகி வீட்டுக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். வெளிநாட்டுப் பயணத்தில் சாதகமான பலன்களை அடைவீர்கள். உயரதிகாரிகள் மூலம் உத்தியோகத்தில் உதவிகள் பெறுவீர்கள். பிள்ளைகளின் நடத்தையால் பெருமைப்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் மூலம் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பொருளாதார மேம்பாடு காண்பீர்கள்.

விருச்சிகம்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் நிலை குலைந்து போவீர்கள். கைக்கு எட்டிய வாய்ப்புகளை பயன்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். வியாபாரக் கடன்களை வசூலிப்பதில் சிரமப்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் கலக்கமடைவீர்கள். கணவன்-மனைவி இருவரும் பழைய விஷயங்களைக் கிளறி அமைதியை கெடுப்பீர்கள் .

தனுசு

அலுவலகப் பணி தொடர்பாக அலைய வேண்டிய கட்டாய நிலைக்க ஆளாவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் வாக்கு சாதுரியமாகப் பேசாவிட்டால் நஷ்டம் அடைவீர்கள். அலட்சியமாக வேலை செய்தால் ஆபத்தில் சிக்குவீர்கள். சந்திராஷ்டமம். எச்சரிக்கை தேவை.

மகரம்

ஆன்மீகப் பணியில் அதிக நாட்டம் கொள்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை தாண்டி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமை அடைவீர்கள். உடன் வேலை பார்க்கும் பெண்ணின் உள்ளத்தை கொள்ளை அடிப்பீர்கள். குடும்ப உறவுகளை ஒன்றிணைக்க பாடுபடுவீர்கள். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள்.

கும்பம்

உண்மையாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பீர்கள். தொழில் தொடர்பான இழுபறி நிலைகளை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பண வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வேலையில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வீர்கள். வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாவீர்கள்.

மீனம்

பெண்கள் துணிச்சலுடன் செயலாற்றி காரியசித்தி அடைவீர்கள். விருப்பமான உறவுகளுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் கொடுத்த வேலையை முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். அரசாங்க உதவிகளை சுலபமாக பெறுவீர்கள். தர்மசிந்தனை அதிகரித்து பிறருக்கு உதவி செய்வீர்கள்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!