முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது: வளாகத்தில் பரபரப்பு: பலரும் படையெடுப்பு

கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது: வளாகத்தில் பரபரப்பு: பலரும் படையெடுப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சர்கள் சிலர், ஆணைக்குழுவுக்கு அதிரடியாக படையெடுத்துள்ளனர்.

இதனால், குற்றப் புலனாய்வுத் துறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று (22) காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் ரணில் கைது செய்யப்பட்டுள்ளார்

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.