சொந்த காசுல சூனியம் வச்சுக்கிட்ட இந்திய அணி...  ஏன் இந்த மாதிரி பண்ணிங்க? 

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல முறையில் விளையாடி ரன் குவித்தார்கள். இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்களை திறமையாக வீழ்த்தி இருந்தனர்.

சொந்த காசுல சூனியம் வச்சுக்கிட்ட இந்திய அணி...  ஏன் இந்த மாதிரி பண்ணிங்க? 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 போட்டிகளையும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியையும் வென்று இருக்கிறது. 

தற்பொழுது நான்காவது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் நேற்று தொடங்கி உள்ளது.

நிறைவடைந்த மூன்று போட்டிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிக்கு ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகச் சாதகமாக இருந்ததுடன், இரண்டு போட்டிகளின் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது. 

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல முறையில் விளையாடி ரன் குவித்தார்கள். இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்களை திறமையாக வீழ்த்தி இருந்தனர்.

முதல் போட்டியில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பந்துவீச்சாளர்களை விட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். 

இப்படி பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அனுபவம் இல்லாத இங்கிலாந்து பந்து வீச்சாளர்களும் போட்டிக்குள் வந்து விடுகிறார்கள். பந்து வீச்சுக்கு சாதகம் இல்லாமல் இருக்கும் நிலையில் அவர்களால் வர முடிவதில்லை.

இந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சுகு சாதகமான மிகவும் மெதுவான மற்றும் எதிர்பாராத நேரங்களில் பந்து தாழ்வாக வரும்படி ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. 

இதன் காரணமாக இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “நான் இங்கிலாந்து பற்றி ட்விட் செய்யவே விரும்புகிறேன். ஆனால், தற்போது இந்திய அணியையும் பார்க்கிறேன். இந்தியா பேட்டிங் செய்த சாதகமாக இருக்கும் ஆடுகளங்களில் மிகவும் அற்புதமான அணியாக இருக்கிறது. 

அங்கு அவர்களுடைய சுழல் பந்துவீச்சாளர்களின் திறமை வெளியில் வருகிறது. இதன் காரணமாக அவர்களை எதிர்த்து விளையாடும் அணிகளை அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றுகிறார்கள். 

அதே சமயத்தில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், எதிரணியின் சுழல் பந்துவீச்சாளர்களும் போட்டிக்குள் வருகிறார்கள். இப்படி இருக்கும் பொழுது நான்காவது போட்டிக்கு ஏன் இப்படி சுழல் பகுதிக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்தார்கள் என எனக்கு புரியவில்லை” எனக் கூறியிருக்கிறார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...