ரோஹித் மற்றும் பிசிசிஐ மீது கிஷன் கடும் அதிருப்தி.. களத்தில் கொடுத்த ரியாக்‌ஷன் இதுதான்.. ரசிகர்கள் ஷாக்!

மும்பை இந்தியன்ஸில் இருக்கும், தொடர் சர்ச்சைகளுக்கு இதுவரை முற்றுப் புள்ளியே வைக்கப்படவில்லை. கேப்டனாக பதவியேற்ற ஹர்திக் பாண்டியாவுக்கு இதுவரை ரோஹித், பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்றவர்கள் வாழ்த்துகளை கூறவில்லை.

ரோஹித் மற்றும் பிசிசிஐ மீது கிஷன் கடும் அதிருப்தி.. களத்தில் கொடுத்த ரியாக்‌ஷன் இதுதான்.. ரசிகர்கள் ஷாக்!

மும்பை இந்தியன்ஸில் இருக்கும், தொடர் சர்ச்சைகளுக்கு இதுவரை முற்றுப் புள்ளியே வைக்கப்படவில்லை. கேப்டனாக பதவியேற்ற ஹர்திக் பாண்டியாவுக்கு இதுவரை ரோஹித், பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்றவர்கள் வாழ்த்துகளை கூறவில்லை.

இந்நிலையில், முதல் போட்டியில் ரோஹித் சர்மாவை, ஹர்திக் மாறிமாறி பீல்டிங் நிற்க வைத்தும், ரோஹித் ஆலோசனை கூற வரும்போது, அவரை புறக்கணித்ததும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மும்பை இந்தியன்ஸ் அணியில், தற்போது இரண்டு கேங் உள்ளது. ஹர்திக் பாண்டியா கேங்கில் இஷான் கிஷன் போன்றவர்கள் இருக்கிறார்கள். ரோஹித் கேங்கில் சூர்யகுமார், பும்ரா, ஆகாஷ் மத்வால், திலக் வர்மா போன்றவர்கள் உள்ளனர்.

ரோஹித் சர்மா கேங்கில் இருக்கும் வீரர்கள், கேப்டன் ஹர்திக் பாண்டியா போடும் உத்தரவுகளை மதிப்பது கிடையாது. அதேபோல், கேப்டன் ஹர்திக் கேங்கில் இருப்பவர்கள் ரோஹித் சர்மாவை மதிப்பது கிடையாது என்ற விமர்சனம் இருக்கிறது.

இதுபோக, இந்திய அணி ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியதால் ரோஹித் சர்மா மீது இஷான் கிஷன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையில் பேச்சு வார்த்தையே இல்லாத நிலைதான் இருப்பதாகவும், களத்தில் மட்டுமே பேசிக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

நேற்று, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது மும்பை அணி ஓபனர் ரோஹித் சர்மா, மற்றொரு ஓபனரான இஷான் கிஷனிடம் தொடர்ந்து அறிவுரைகளை வழங்கிய நிலையில், அதற்கு கிஷன் எவ்வித பதிலையும் கூறாமல், நேருக்கு நேர் கூட பார்க்காமல், தலை குனிந்தவாரே 'ஓகே ஓகே' எனக் கூறினார்.

இதற்குமுன், முதல் மூன்று போட்டிகளில் இப்படி இல்லை. இருவரும் களத்தில் நல்லபடியாகதான் பேசிக் கொண்டனர். ஆனால், நான்காவது போட்டியில் திடீரென்று கிஷன் முகம் கொடுத்துக் கூட பேசாமல் இருந்தது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியில், தனக்கு இடம் கிடைக்காது என இஷான் கிஷனுக்கு உறுதியாக தெரிந்துவிட்டதால்தான், இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ மீது கிஷன் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...