நாணய சுழற்சியில் வெற்றி இந்தியாவுக்கு சாதகம்.. ஏன் தெரியுமா?

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தான் மோதும் முக்கிய ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பித்து நடக்கின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி இந்தியாவுக்கு சாதகம்.. ஏன் தெரியுமா?

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தான் மோதும் முக்கிய ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பித்து நடக்கின்றது.

இந்த போட்டிக்கான  டாசை வென்ற ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இது இந்தியாவுக்கு சாதகமான டாஸ் ஆக பார்க்கப்படுகிறது.

காரணம் இங்கு நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றது. இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா இது நிச்சயம் எங்களுக்கு ஒரு கனவு போல தான். 

இந்த சூழலை நாங்கள் அனுபவிக்க இருக்கின்றோம். ஆடுகளம் ஒரே மாதிரி தான் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது பனிப்பொழிவு இருப்பதால் கூடுதல் சாதகமாக இருக்கும் என நம்புகிறேன்.

எனவே இதனால் தான் நாங்கள் சேஸிசிங்கை தேர்ந்தெடுத்தோம். ஒவ்வொரு நாளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறோம். 

இன்றைய ஆட்டத்தில் நாங்கள் நல்ல முறையில் தொடங்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த தொடரில் நீங்கள் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நெருக்கடி நிறைந்த தொடர் என்பதால் உங்களுக்கு ஓய்வும் அவசியம்.எங்கள் அணியில் பதற்றம் இல்லாமல் நாங்கள் இருக்கிறோம். இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர் கில், இஷான் கிசனுக்கு பதிலாக களமிறங்குகிறார் என்று ரோகித் சர்மா கூறினார். 

இதனை தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், நாங்களும் முதலில் பந்து வீச நான் வந்தோம்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...