பாகிஸ்தான் சாதனையை உடைத்த இந்தியா.. வரலாற்றிலேயே முதலிடம்... டி20 போட்களில் அதிக வெற்றி!

இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியானது அந்த அணியின் 136 டி20 வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் சாதனையை உடைத்த இந்தியா.. வரலாற்றிலேயே முதலிடம்... டி20 போட்களில் அதிக வெற்றி!

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக வெற்றிகளை பெற்ற அணியாக, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட  டி20 தொடரில் நான்கு போட்டிகளில், மூன்றில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றி உள்ளது. 

இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியானது அந்த அணியின் 136 டி20 வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 213 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கும் இந்திய அணி அதில் 136 வெற்றிகளை பதிவு செய்துள்ளதுடன், பாகிஸ்தான் அணி 226 டி20 போட்டிகளில் ஆடி 135 வெற்றிகளை பெற்று உள்ளது.

ஒருநாள் அணியில் நம்பர் 1 வீரர் சுப்மன் கில்லுக்கு ஏன் இடமில்லை? காரணமே வேறு!

அது மட்டுமின்றி, இந்திய அணியானது பாகிஸ்தான் அணியை விட அதிக வெற்றி சதவீதம் கொண்டுள்ளதுடன், இந்தியா 66.66 வெற்றி சதவீதம் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அணி 62.04 வெற்றி சதவீதம் கொண்டுள்ளது. 

அதுமட்டுமின்றி டெஸ்ட் அந்தஸ்து கொண்ட கிரிக்கெட் அணிகளில் அதிக டி20 வெற்றி சதவீதம் கொண்ட அணி இந்தியா தான் என்பதுடன், டி20 போட்டிகளில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

இந்திய அணியின் இந்த சாதனையை முறியடிக்க பாகிஸ்தான் அணியால் முடியும் என்றாலும் இந்தியா அடுத்த இரு மாதங்களில் இன்னும் இரண்டு டி20 தொடர்களில் பங்கேற்க உள்ள நிலையில், அதில் அதிக வெற்றிகளை பெற்றால் இந்தியாவின் வெற்றிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும். 

இது மட்டுமின்றி இந்திய மண்ணில் 2019 பெப்ரவரி முதல் நடந்த 14 டி20 தொடர்களில் இந்தியா இதுவரை தோல்வியே சந்திக்கவில்லை என்ற அரிய சாதனை ஒன்றையும் செய்துள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...