பருப்பெல்லாம் இங்கே வேகாது.. இங்கிலாந்து தோல்விக்கு அதுதான் காரணம்.. சோயப் அக்தர்!
உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக அரையிறுதிக்கு முன்னேறும் என்று கணிக்கப்பட்ட அணிகளில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருந்தது.
உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக அரையிறுதிக்கு முன்னேறும் என்று கணிக்கப்பட்ட அணிகளில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருந்தது.
அதற்கேற்ப நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் ரிட்டர்ன்ஸ், ஹாரி ப்ரூக் கம்பேக் என்று இங்கிலாந்து அணியும் மாற்றம் பெற்றிருந்தது. அதேபோல் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பையையும் வென்றிருந்ததால், அந்த அணியை யாரும் எளிதாக புறம் தள்ளிடவில்லை.
ஆனால் உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் இங்கிலாந்து அணி மண்ணை கவ்வியுள்ளது. ஆஃப்கானிஸ்தான், இலங்கை என்று சிறிய அணிகளாக பார்க்கப்பட்டவர்களிடம் கூட இங்கிலாந்து அணியால் வெற்றிபெற முடியவில்லை.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பெரிய அணிகள் உலகக்கோப்பை தொடரில் இருந்து விரைவாக வெளியேறுவதை தடுக்கவே ஐசிசி சார்பாக ரவுண்ட் ராபின் முறையில் உலகக்கோப்பை நடத்தப்பட்டு வருகிறது.
அப்படியிருந்தும் இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியடைந்து கிட்டத்தட்ட தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட, இந்த உலகக்கோப்பை தொடரில் டாப் 7 இடங்களை பிடிக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து அணியோ இப்போது வரை கடைசி இடத்திலேயே உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி தோல்வி குறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் சோயப் அக்தர் பேசுகையில், இங்கிலாந்து அணியை இந்திய அணி பொளந்துகட்டிவிட்டது.
இங்கிலாந்து அணி இவ்வளவு கேவலமாக தோற்பதற்கு அவர்களின் அணுகுமுறையே காரணமாக அமைந்துள்ளது. டி20 பாணியிலான கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட்டில் புகுத்த முயற்சிக்கிறார்கள். இங்கிலாந்து அணியிடம் எந்த திட்டமும் இல்லை.
யார் விக்கெட் செல்வதை தடுக்க வேண்டும், யார் அட்டாக் செய்ய வேண்டும், யார் பார்ட்னர்ஷிப் பில்ட் செய்ய வேண்டும் என்ற எந்த திட்டமும் இல்லை. உலகக்கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறுவதை பார்க்க பாவமாக உள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் பேஸ் பால் அணுகுமுறை சரியாக இருக்கலாம். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட்டை போல் தான் விளையாட வேண்டும். அதற்கான மரியாதையை அளிக்க வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |