உலககோப்பை முதல் போட்டி- கோலி பங்கேற்பது சந்தேகம்? அணியிலிருந்து விலகி மும்பை சென்றதால் குழப்பம்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இந்தியா விளையாட இருந்த முதல் பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. 

உலககோப்பை முதல் போட்டி- கோலி பங்கேற்பது சந்தேகம்? அணியிலிருந்து விலகி மும்பை சென்றதால் குழப்பம்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இந்தியா விளையாட இருந்த முதல் பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. 

இந்த நிலையில் இரண்டாவது பயிற்சி ஆட்டம் தற்போது திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி பலம் குன்றிய நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. 

இந்த நிலையில் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு சென்றிருக்கிறார்கள்.

ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மட்டும் அணியிலிருந்து பாதியில் விலகி மும்பைக்கு சென்றிருக்கிறார். விராட் கோலி தனிப்பட்ட காரணத்திற்காக தான் அணியை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

எனினும் இது தொடர்பாக பிசிசிஐ இதுவரை எந்த ஒரு தனிப்பட்ட விளக்கத்தையும் தரவில்லை. உலகக் கோப்பை தொடருக்கு முன் ஒரு வீரர் இப்படி பாதியில் அணியை விட்டு செல்வது ஏன் என்று இதுவரை ரசிகர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை.

விராட் கோலி குடும்பத்தினருக்கு ஏதேனும் பிரச்சனையா என்பது குறித்தும் தகவல் ஏதுமில்லை. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றால் அது விராட் கோலி கையில் தான் இருக்கிறது. 

ஆனால் விராட் கோலி இப்படி முக்கியமான கட்டத்தில் பாதியில் ஊர் திரும்பி இருப்பது அவருடைய ரசிகர்களையும் ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.

இதே போல் ஒரு சூழ்நிலையில்தான் 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடங்க இன்னும் சில நாட்கள் இருந்த நிலையில் தோனிக்கு குழந்தை பிறந்தது. 

ஆனால் தனது மனைவியுடன் பிரசவப் பொழுதை கழிக்காமல் தம் நாட்டுக்காக விளையாட வந்திருப்பதாகவும் முதலில் நாட்டு பணி தான் முக்கியம் பிறகுதான் குடும்ப பணி என்று கூறிவிட்டு தோனி உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து விளையாடினார்.

ஆனால் விராட் கோலி என்ன விஷயம் என்று சொல்லாமல் ரசிகர்களை தவிக்க விட்டு சென்று இருக்கிறார் என தல ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

இதனால் நிச்சயமாக நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. தற்போது கேள்வி எல்லாம் அக்டோபர் எட்டாம் தேதி இந்தியா ஆஸ்திரேலியாவை தனது முதல் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் விராட் கோலி பங்கேற்பாரா இல்லையா என்பதுதான் தற்போது சந்தேகமாக இருக்கிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...