அடுத்த சுற்றுக்கு முன்னேறப்போவது யார்..? இலங்கை - ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை
8 அணிகள் பங்கேற்றுள்ள 17ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
8 அணிகள் பங்கேற்றுள்ள 17ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறும்.
அபுதாபியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகின்ற 11-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் போராட உள்ளன. ஆப்கானிஸ்தான் தோற்றால் இந்த பிரிவிலிருந்து இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இலங்கை தோற்றால் ஆப்கானிஸ்தான் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து சூப்பர்4 சுற்றை உறுதி செய்யும். மறுபுறம் இலங்கை மற்றும் வங்காளதேச அணிகளில் ஏதாவது ஒன்று ரன்ரேட் அடிப்படையில் மற்றொரு அணியாக சூப்பர்4 சுற்றை எட்டும்.
தற்போதைக்கு இலங்கை அணி வங்காளதேசத்தை விட நல்ல ரன் ரேட் கொண்டுள்ளது.
