இந்த 8 தேதிகளில் பிறந்தவர்களுக்கு அடுத்த 7 நாட்கள் அதிஷ்டம் அடிக்கப் போகுது!

Weekly Numerology: எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும். ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். 

இந்த 8 தேதிகளில் பிறந்தவர்களுக்கு அடுத்த 7 நாட்கள் அதிஷ்டம் அடிக்கப் போகுது!

எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும். ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். 

ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். 

இப்போது 15 அக்டோபர் 2023 முதல் 21 அக்டோபர் 2023 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிகரிக்கப் போகும் பண கஷ்டம்!

எண் 1 பலன்

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் காதல் நிறைந்ததாக இருக்கும். காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் துணையுடன் சிறந்த நேரத்தை செலவிடுவீர்கள். 

தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உண்ணும் உணவிலும், உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

எண் 2 பலன் 

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2. இந்த தேதிகளில் பிறந்த மாணவர்களுக்கு இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். படிப்பில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள் மற்றும் உங்கள் இலக்கிலிருந்து நீங்கள் விலகலாம். வேலை செய்பவர்கள் ஏமாற்றத்தை சந்திக்கலாம். 

பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக காத்திருந்தால், அது கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்கள் முயற்சிகளை கைவிடாதீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெற புதிய யுக்திகளை உருவாக்குவார்கள்.

எண் 3 பலன்

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த வாரத்தில் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஈகோ உங்கள் அன்புக்குரியவர்களை உங்களிடமிருந்து தூரமாக்கும். தொழில் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்கலாம்.

வாரத்தின் ஆரம்ப நாட்கள் உங்களுக்கு மிகவும் பரபரப்பாகவும், பிஸியாகவும் இருக்கும். ஆனால் போக போக சிறப்பாக இருக்கும். கல்வி தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

எண் 4 பலன்

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் நடத்தையில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்களின் நிலை வலுவாக இருக்கும்.

பெரிய நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, யோகா மற்றும் தியானத்தை உங்கள் தினசரி வழக்கத்தில் கொள்ளுங்கள்.

எண் 5 பலன்

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் செயல்திறன் பணியிடத்திலும், வியாபாரத்திலும் சிறப்பாகவும், பாராட்டத்தக்கதாகவும் இருக்கும்.

உங்கள் வருமானம் அதிகரிக்கும் மற்றும் உங்கள் நிதி நிலை வலுவடையும். வாரத்தின் நடுப்பகுதியில் நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

எண் 6 பலன்

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உங்கள் மரியாதை அதிகரிக்கும்.

தாம்பத்திய வாழ்வில் சில மனக்கசப்புகள் இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் திடீர் சரிவு ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண்கள் அல்லது எலும்புகள் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கலாம்.

எண் 7 பலன்

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 7. இந்த தேதிகளின் பிறந்தவர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். வேலை தொடர்பான முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெறவில்லை என்றால், சரியான திசையில் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வாரத்தின் நடுப்பகுதியில் நீங்கள் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். கடன் வாங்கும் சூழல் ஏற்படக்கூடும். அதிக மன அழுத்தம் மற்றும் அலைச்சலால் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.

எண் 8 பலன்

8,17,26 ஆகிய தேகிளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 8. இந்த தேதிகளில் பிறந்த வியாபாரிகளுக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும். அதே சமயம் பணிபுரிபவர்கள் சற்று அதிருப்தியுடன் இருப்பார்கள். சிலர் வேலையை மாற்ற திட்டமிடலாம்.

காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமணமாக இருந்தாலும் சரி, உங்கள் துணையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். இந்த வாரத்தில் தேவையற்ற சண்டைகளைத் தவிர்க்க வேண்டும்.

எண் 9 பலன்

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் இனிமையாக இருக்கும். இந்த வாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். மேலும் வருமானத்தில் உயர்வைக் காணக்கூடும்.

உங்களை புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள, இந்த வாரத்தில் உங்கள் தினசரி வழக்கத்தில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உங்கள் ஒருங்கிணைப்பு இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த வாரத்தில் சில முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...