சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக மாத சராசரி ஊதியம் உச்சம் தொட்டது — அதிக ஊதியம் வழங்கும் துறை எது?
சுவிட்சர்லாந்தில் மாத சராசரி ஊதியம் வரலாற்றில் முதன்முறையாக 7,000 சுவிஸ் ஃப்ராங்குகளை கடந்துள்ளது. Federal Statistical Office வெளியிட்ட 2024 தரவுகளின் படி, முழுநேரப் பணியாளர்கள் மாதத்திற்கு சராசரியாக 7,024 சுவிஸ் ஃப்ராங்குகள் சம்பளம் பெற்றுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் மாத சராசரி ஊதியம் வரலாற்றில் முதன்முறையாக 7,000 சுவிஸ் ஃப்ராங்குகளை கடந்துள்ளது. Federal Statistical Office வெளியிட்ட 2024 தரவுகளின் படி, முழுநேரப் பணியாளர்கள் மாதத்திற்கு சராசரியாக 7,024 சுவிஸ் ஃப்ராங்குகள் சம்பளம் பெற்றுள்ளனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 246 ஃப்ராங்குகள் அதிகம்.
ஊதியத்தில் பெரிய வித்தியாசம்
சுவிட்சர்லாந்தில் ஊதிய அளவில் குறிப்பிடத்தக்க வேறுபாடும் உள்ளது:
குறைந்த 10% பணியாளர்கள்: மாதம் 4,600 ஃப்ராங்குகள்
அதிக 10% பணியாளர்கள்: மாதம் 12,500 ஃப்ராங்குகள்
இதனால், உயர்ந்த மற்றும் தாழ்ந்த வருமானத்தினருக்கிடையே பெரிய இடைவெளி உள்ளது என்பதும் தெளிவாகிறது.
எந்த துறைகள் அதிகம் சம்பளம் தருகின்றன?
தரவுகள் படி,
அதிக ஊதியம் பெறும் துறைகள்:
மருந்து உற்பத்தி துறை
ஆய்வு & மேம்பாடு (R&D)
வங்கி & நிதி சேவைகள்
குறைந்த ஊதியம் பெறும் துறைகள்:
சில்லறை விற்பனை
விருந்தோம்பல் துறை
ஹோட்டல் துறை
ஆண்–பெண் சம்பள வித்தியாசம் தொடர்கிறது
ஆண்களைவிட பெண்கள் சராசரியாக 8.4% குறைவான ஊதியம் பெறுகின்றனர் என்று அறிக்கை கூறுகிறது.
சுவிட்சர்லாந்தில் அதிக ஊதியம் வழங்கும் துறை?
ஆச்சரியமாக, வங்கித்துறை (10,723 ஃப்ராங்குகள்) முதலிடம் பெறவில்லை. அதனை விட அதிகம் சம்பளம் வழங்குவது புகையிலைத் துறை, அங்கு பணியாளர்கள் மாதம் சராசரியாக 14,304 சுவிஸ் ஃப்ராங்குகள் பெறுகின்றனர்.
