டெக்சாஸில் நாய் தாக்குதலில் உயிரிழந்த 23 வயது மாணவி; துயரச் சம்பவம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 23 வயது கல்லூரி மாணவி மேடிசன் ரிலே ஹல், தன்னால் பராமரிக்கப்பட்டு வந்த மூன்று பிட்புல் இன நாய்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த துயரமான சம்பவம் சமூகத்தில் பேர்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டைலர் (Tyler) பகுதியில் உள்ள ஒரு வீட்டில், நாய்களின் உரிமையாளர் வெளியூரில் இருந்தபோது, அந்த நாய்களை கவனிப்பதற்காக மேடிசன் பொறுப்பேற்றிருந்தார். நவம்பர் 21 ஆம் தேதி மாலை, வீட்டின் பின்புறத்தில் அசாதாரணமான சத்தம் கேட்டதால் அண்டை வீட்டுக்காரர் அவசர உதவி குழுவுக்கு தகவல் தெரிவித்தார்.

அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தபோது, மேடிசன் உயிரிழந்த நிலையிலிருந்ததை கண்டறிந்தனர். ஆய்வின்போது, மூன்று பிட்புல் நாய்களும் அதிகாரிகளை நோக்கி ஓடியதாகவும், அதில் ஒன்றை பாதுகாப்பு காரணங்களால் சுட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மற்ற இரண்டு நாய்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.

இளங்கலைப் படிப்பை முடிக்க இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில் நடந்த இந்த சம்பவம், அவரது குடும்பத்தினரையும் சமூகத்தையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.