சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை வெகுவாக உயர்வு: நடுத்தர வர்க்கம் அதிகம் பாதிப்பு

சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகைகள் தொடர்ந்து, குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் பெரும் சுமையை எதிர்கொள்கிறார்கள்.

Zug மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வாடகை 30% முதல் 40% வரையிலும் அதிகரித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். புதியதாக குடியேறி வரும் பணக்காரர்கள் எந்த அளவிலான வாடகையும் செலுத்தத் தயார் என்பதே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த அதிகரிப்புக்கு மேலும் தீனி போடும் வகையில், வாடகைக்கு கிடைக்கும் வீட்டுகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. இதனால் குறிப்பாக நடுத்தர வர்க்க மக்கள் பெரும் பொருளாதார அழுத்தத்துக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், வீட்டுவிலை கூட கொடிகட்டிப் பறக்கும் நிலையில் உள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் வீடுகளின் விலை 26% உயர்ந்துள்ளது.

சூரிக் பகுதியில், ஒரு குடும்பம் வசிப்பதற்கு ஏற்ற சீரான வீடுகளின் விலை தற்போது மூன்று மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.