தலைசுற்றவைக்கும் உலக செல்வந்தர்களின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?

உலக அளவில் முதன்முறையாக பணக்காரர்களின் எண்ணிக்கையும் 3,000ஐத் தாண்டியுள்ளது.

தலைசுற்றவைக்கும் உலக செல்வந்தர்களின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?

உலகில் செல்வந்தர்களின் மொத்தச் சொத்து மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக Oxfam அறநிறுவனம் தெரிவித்துள்ளது. உலகப் பொருளியல் மாநாட்டில் பங்கேற்க பன்னாட்டுத் தலைவர்களும், பெரும் வர்த்தகர்களும் சுவிட்சர்லாந்தில் கூடியிருக்கும் வேளையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Oxfam வெளியிட்ட கணக்கீட்டின் படி, கடந்த ஆண்டு உலகச் செல்வந்தர்களின் மொத்தச் சொத்து மதிப்பு 16 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 18.3 டிரில்லியன் டாலராக பதிவாகியுள்ளது. இதனுடன், உலக அளவில் முதன்முறையாக பணக்காரர்களின் எண்ணிக்கையும் 3,000ஐத் தாண்டியுள்ளது.

மேலும், செல்வந்தர்களின் பட்டியலில் முதல் 12 இடங்களில் உள்ளவர்களின் மொத்த சொத்துக்கள், உலகின் ஏழைகளில் பாதிப் பேரின் மொத்த செல்வத்தைவிட அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவ்வளவு மிதமிஞ்சிய சொத்துக்களைப் பயன்படுத்தி, செல்வந்தர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளும் போக்கு உலகம் முழுவதும் வலுப்பெற்று வருவதாக Oxfam எச்சரித்துள்ளது.