இந்திய அணிக்கு உதவிய இலங்கை.. ஐடியாவுடன் வந்த ரோகித் சர்மா.... பிளேயிங் லெவனில் மாற்றம்?

இன்றைய போட்டியில் வென்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். இதனால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணிக்கு உதவிய இலங்கை.. ஐடியாவுடன் வந்த ரோகித் சர்மா.... பிளேயிங் லெவனில் மாற்றம்?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து இலங்கை அணி களமிறங்கியுள்ளது. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 6 போட்டிகளில் வென்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. 

இதனால் இன்றைய போட்டியில் வென்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். இதனால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல் இலங்கை அணியும் அரையிறுதிக்கான பந்தயத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால், புள்ளிப்பட்டியல் மட்டுமல்லாமல் அரையிறுதி பந்தயத்தில் நிலை சமநிலைக்கு மாறிவிடும். 

இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை கேப்டன் குசல் மெண்டிஸ் பேசுகையில், நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். அதேபோல் மும்பை ஆடுகளம் சேஸிங் செய்யும் அணிகளுக்கு சாதகமாக இருக்கும். 

கடைசி சில போட்டிகளில் ஒவ்வொரு வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அதனை நிச்சயம் தொடர்வார்கள் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் தனஞ்செயா டி சில்வாவுக்கு பதிலாக ஹேமாந்தா களமிறங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இதன்பின் ரோகித் சர்மா பேசுகையில், நாங்களும் முதல் பேட்டிங் செய்யவே விரும்பினோம். இந்த பிட்ச்சில் பேட்டிங் செய்வதற்கு ஏதுவானதாக இருக்கும். நிச்சயம் பவுலர்களுக்கும் தொடக்கத்தில் சாதகம் இருக்கும். 

ஆனால் சேஸிங் போது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல உதவி இருக்கும் என்று நினைக்கிறேன். முதல்முறையாக சொந்த மண்ணில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.

உலகக்கோப்பை தொடரில் முதல் 5 போட்டிகளிலும் இந்திய சேஸிங் செய்து வென்றது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே முதல் பேட்டிங் செய்தது. 

இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் முதல் பேட்டிங் செய்து பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும் என்று பார்க்கப்பட்டது. அதற்காகவே ரோகித் சர்மாவும் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நோக்கில் களமிறங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...