சொந்த மண்ணில் சொதப்பிய ரோகித் சர்மா.. சோகத்தில் தலைகுனிந்த ரித்திகா!
உலகக்கோப்பை தொடரில் சொந்த மண்ணில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெறும் 4 ரன்களில் போல்டாகி ஆட்டமிழந்து வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் சொந்த மண்ணில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெறும் 4 ரன்களில் போல்டாகி ஆட்டமிழந்து வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசம் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணி தரப்பில் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல் சேஸிங் செய்து 5 வெற்றிகளை பெற்றிருப்பதால், முதல் பேட்டிங் செய்ய விரும்பியதாகவும் ரோகித் சர்மா கூறி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா முதல்முறையாக சொந்த மண்ணில் களமிறங்கியுள்ளார். அதிலும் உலகக்கோப்பை தொடரில் சொந்த மண்ணில் ரோகித் சர்மா முதல்முறையாக வீரராகவும், கேப்டனாகவும் களமிறங்கி இருக்கிறார்.
இதனால் அபாரமான ஃபார்மில் இருக்கும் ரோகித் சர்மா பேட்டிங்கில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. இலங்கை அணி தரப்பில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மதுஷங்கா முதல் ஓவரை வீசினார்.
முதல் பந்திலேயே அசத்தலான ஒரு பவுண்டரியை விளாசி ரோகித் சர்மா ரன் கணக்கை தொடங்க, மும்பை மைதானத்தில் இருந்த ஒவ்வொரு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினார்.
ஆனால் 2வது பந்தில் மதுஷங்க வீசிய ஸ்விங் பந்தை ரோகித் சர்மா மிஸ் செய்ய, அது சரியாக ஆஃப் ஸ்டம்பை தகர்த்தது. அந்த ஸ்டம்பை சில அடி தூரம் பறந்து சென்ற விழ, மும்பை மைதானமே ஒட்டுமொத்தமாக அமைதியானது.
ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியாமல் ரோகித் சர்மா களத்தில் இருந்து சோகத்துடன் வெளியேறினார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியின் மதுஷங்க 5வது முறையாக முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதனை மைதானத்தில் இருந்த பார்த்த ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, சோகத்தில் தலைகுனிய அவரது தோழிகள் அவருக்கு ஆறுதல் கூறினர்.
இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிக்கு பின் முதல் முறையாக ரோகித் சர்மா ஒற்றை இலக்கத்தில் வெளியேறுவது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |