டிராவிட் எடுத்த அதிரடி தீர்மானம்... ராகுலுக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்பு! ரோஹித்த சர்மாவும் பச்சைக்கொடி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது.

டிராவிட் எடுத்த அதிரடி தீர்மானம்... ராகுலுக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்பு! ரோஹித்த சர்மாவும் பச்சைக்கொடி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது.

யாருமே எதிர்பார்க்காத நிலையில், விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

எனினும், விராட் கோலிக்கு பதில் அணியில் இடம்பிடிக்கவுள்ள மாற்றுவீரர் யார் என்ற தகவலை இன்னும் பிசிசிஐ வெளியிடவில்லை.

இந்த சூழ்நிலையில், அணியில் இருக்கும் நட்சத்திர வீரர் ராகுலுக்கு புதிய பொறுப்பினை வழங்க டிராவிட் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விராட் கோலி இல்லாத நிலையில் நான்காவது வீரர் என்ற முக்கியமான இடத்தில் கே எல் ராகுலை விளையாட வைக்க ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திடீரென விலகிய கோலி... இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்? முழு விவரம்!

ஒவ்வொரு அணியிலுமே ஸ்டார் அந்தஸ்தை உடைய வீரர்கள் தான் நான்காவது வீரராக விளையாடும் நிலையில், விராட் கோலி இடத்தில் கே.எல் ராகுலை களம் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், விக்கெட் கீப்பராக இருந்து கொண்டு கே.எல் ராகுலால் நான்காவது இடத்தில் விளையாடி பெரிய ஸ்கோர் எடுக்க முடியாது என்பதால் புதிய விக்கெட் கீப்பர் ஒருவரை அணியில் கொண்டு வர ராகுல் டிராவிட் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகின்றது.

அதன்படி கே எஸ் பரத் பிளேயிங் லெவனுக்குள் வர அதிக வாய்ப்பு உள்ளதுடன், கே எஸ் பரத், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான நான்கு நாள் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சதம் அடித்து இருந்தார்.

தற்போது விராட் கோலி இல்லாததால் ராகுலை பேட்ஸ்மேனாக களம் இறக்கி கே எஸ் பரத்தை அணியில் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...