விராட் கோலியின் மோசமான சாதனை: தொடர்ச்சியாக 2 ஒருநாள் போட்டிகளில் டக் அவுட் – ஓய்வு குறித்த தகவல்!

கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் 8 பந்துகள் ஆடி, ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

விராட் கோலியின் மோசமான சாதனை: தொடர்ச்சியாக 2 ஒருநாள் போட்டிகளில் டக் அவுட் – ஓய்வு குறித்த தகவல்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது 17 வருட கிரிக்கெட் வாழ்வில் மிகவும் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்போட்டியில், அணித்தலைவர் சுப்மன் கில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, களமிறங்கிய விராட் கோலி, 4 பந்துகள் ஆடி ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

முன்னதாக, கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் 8 பந்துகள் ஆடி, ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

கோலியின் 17 வருட கிரிக்கெட் வாழ்க்கையில், ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் டக் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும்.

அவர் இதுவரை விளையாடிய 304 ஒருநாள் போட்டிகளில், 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இந்திய வீரர்களில் சச்சின் (20 முறை) மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் (19 முறை) மட்டுமே இவரை விட அதிக டக் அவுட் பெற்று முன்னணியில் உள்ளனர்.

36 வயதான விராட் கோலி ஏற்கெனவே T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்து விட்டார்.

தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் போட்டி-உடற்தகுதி (match-fitness) குறித்து கவலைகளை எழுப்பினார். கோலி 8 மாதங்களுக்கு முன்னர் சர்வதேச போட்டிகளில் விளையாடினாலும், ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு பயிற்சி எதுவும் இல்லாமல் இந்த ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வருவதால், தொடர்ச்சியான டக் அவுட் ஆனது அவர் ஓய்வு பெறுவதற்கான அழுத்தங்களை அதிகரிக்கும்.

அவர் அவுட் ஆகி ஓய்வறைக்குச் செல்லும் போது ரசிகர்களை நோக்கி தனது வலது கையுறையை உயர்த்தினார். இது ஓய்வை அறிவிப்பதற்காக அறிகுறியா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

எனினும், விராட் கோலி 2027 உலகக்கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.